Free Space

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- மோடி அரசுக்கு பலத்த அடி...



-அபூசாலி முகம்மத்  சுல்பிகார்-

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் பா.ஜ.க மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான நபம் துகியின் ஆட்சி அமைகிறது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- மோடி அரசுக்கு பலத்த அடி... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- மோடி அரசுக்கு பலத்த அடி... Reviewed by Madawala News on 7/14/2016 09:33:00 PM Rating: 5