Yahya

மகிந்தரின் பாதயாத்திரை .. பொது ஊடகங்களில் சிங்கள மக்கள் வெளியிட்ட கொமன்ட்கள் இவைதான். mrஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை கனேதென்ன - ஹிகுல பகுதியில் நேற்று மாலை நிறுத்தபட்டு இன்று காலை ஒன்பது மணிக்கு, மாவனல்லை தாண்டி உள்ள உத்துவன் கந்தேயில் இன்று ஆரம்பமாகி உள்ளது.

நான்கு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாத யாத்திரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை அடைய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பேசுபொருளாக உள்ள இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் முன்னணி சிங்கள ஊடகங்கள் சிலவற்றின் Comment பகுதியில் மற்றும் அவர்களின் முகநூல் பக்கங்களில் பெளத்த மக்கள் நேற்றும் இன்றும் தெரிவித்த  கருத்துக்கள் சில உங்கள் பார்வைக்கும்.

* ஷிஹான் : ஜயவேவா ஜயவேவா  ஜயவேவா .. எங்கள்  எதிர்கால ஜனாதிபதி.

*செம் : யுத்தத்தை முடித்த தலைவன் என்ற வகையில் ஒய்வு பெறாமல், யாப்பை மாற்றி ஆயுளுக்கும்  ஜனாதிபதியாக இருக்க நினைத்து தோற்றும் இவர் இன்னும் பாடம்  படிக்கவில்லை.

* விமலகுன : இப்போது இவர்  முகத்தில் சந்தோசம் இல்லை.

*சந்த்ரா: (கிண்டலாக) எங்கட  காலத்துல  என்றால்  இந்நேரம்  ஆட்கள போட்டு  அடிச்சு  விரட்டி இருப்பம்.

* துஷார: முன்ன கையில வெச்சிட்டு  இருந்த மேஜிக்ப  ந்து  இப்ப எங்க?

*லெஸ்லி விஜேசிங்க : பாதயாத்திரை  ஜீப்  யாத்திரை ஆனது. குரங்குகள் பின்னால்  ஓடுகின்றன.

* விபுல: இந்த அரசை கவிழ்க்க  உங்களுக்கு  பெறும் ஷக்தி கிடைக்கட்டும்

* அனுர : ( மேலே கருத்து சொன்ன  விபுலவுக்கு பதில்) விபுல, தேர்தல் நடத்தாமல் அரசாங்கத்தை  எப்பிடி கவிழ்க்க முடியும்னு கொஞ்சம்  சொல்லுங்க. இவர்கள் அரசை கவிழ்க்க அல்ல. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவே போராடுகிறார்கள்.

* பெர்னட் : மகிந்த மற்றும்  ஆதரவாளர்களின் முயற்சி எமக்கு பெறும் சக்தியை  கொடுக்கிறது.

*லியகனே: முக்கியமான ஒன்றுக்காக   நடப்பது உடம்புக்கு அல்லது நாட்டுக்கு  மிகவும் நல்லது. ஆனால் இவர்கள் நடப்பது  இவர்கள் செய்த களவு, கொலைகள் வெளியாவதை தடுக்கவே எடுக்கும் முயற்சி. இந்த மாதிரி உள்ளவங்க  இருக்குற  நாட்டுல  வாழறதும் வெட்கக்கேடு.

*அஷோக : இந்த  அரசு  தொடர்ந்து  ஆட்சியில் இருந்தால்  இந்நாட்டை  மூன்றாக உடைத்து விடுவார்கள். அதற்கு முன்னர் அவர்களை வீட்டுக்கு  அனுப்ப வேண்டும்.

*விராஜ்: இங்க  பாரு.. இந்த நாட்டை திண்ட  திருடர்களே  பாதயாத்திரை  போறத..

* சமன்: மகிந்த  என்பவர் உண்மையில்  இரண்டாவது  துட்டுகெமுனு  அரசன், அவருக்கு  இந்த நாடே  கடன் பட்டுள்ளது.

*ஆஷான்: எங்கள் நாட்டு  மக்களுக்கு  குற்றவாளிகளை இனம்காண முடியாமல் இருப்பது வேதனையே..

லியனபத்திரன: பொதுமக்களின் பாதையை அடைத்து இது என்ன வேலை?

சுனிமல்: ஆம்புலன்சில்  நோயாளி இல்லை என்று அதனை தாக்கியவர்களுக்கு தெரியாதா.. நோயாளியை ஏற்றவும்  ஆம்புலன்ஸ்கள் செல்லும் என்று ?

தம்மிக்க: முன்னேறிச் செல்ல வாழ்ழ்த்துக்கள்.

அருண: பாதயாத்திரை  தலைவர்கள் இரவில் தங்குவது சொகுசு  ஹோட்டல்களில்.. ஆனால் பின்னால் செல்பவர்கள்  பொலிதீன்  துண்டை சுற்றிக்கொண்டு  பாதையில்  தூங்க வேண்டும். .

அத்துர: மக்கு வேலை

மகாதேவ: அன்று  இடுப்பில் சீவன் இருந்த தலைவன்  இருந்தால்தான் இன்று யுத்தம்  இன்று நாம்  உயிருடன் இருக்கிறோம். இப்போ  இருப்பவர்கள் இருந்திருந்தால்  இன்று அமெரிக்காவுக்கு  யுத்தத்தை விற்று இருப்பார்கள்.

பிரதீப்: யாரை  எமாற்ற  பார்க்கிறார்கள்.

பெர்வின்: முன்பு  வானில்  யாத்திரை   செய்தவர்கள் இன்று நிலத்தில் செய்கிறார்கள்.

சிசிர: நல்லது. நிறுத்த வேண்டாம்..

பண்டார: இதனை  அங்கொட  மனநோயாளிகள் வைத்தியசாலையில்  ஆரம்பித்து  இருக்கணும்.

சந்தன: மகிந்த  சேர்  யாரின் எதிர்காலத்துக்கு  இந்த மாதிரி  போரடுரார்னு  எங்களுக்கு தெரியும்.

தரு: எமது இனத்தின் தந்தை  மகிந்த

பிட்டபெத்தர  ஜயா : அவர்கள் ரத்துபஸ்வல பிரதேசத்தை  எப்பிடி  தாண்டுவார்கள் என்று  நாங்கள்  பார்க்கிறோம்.

அமித் : மகிந்தவுக்காக எனது உயிரையும்  கொடுப்பேன்.

குமார: அதிகாரத்தை கைப்பற்ற கடைசியா ஒரு முயற்சி.

ஜகத்: நாமல் போன்றவர்கள்  இல்லாவிட்டால்  நல்லா இருக்கும்.

அனுராத: இந்த  கொஞ்ச  நாளக்கி  பிரைட் ரைஸ், சாராயத்துக்கு  நல்ல கிராக்கி  இருக்கும்.

சுமுது: நாளைக்கி  நாளன்னிக்கு  மண்டைய  போட இருக்குறவங்களுக்கு  எதுக்கு பாதயாத்திரை.. மக்களை எமாற்றி  வாக்கு  பெற்ற  களம் முடிஞ்சு. அடுத்த  முறையும் உங்களுக்கு தோல்வி தான்.
மகிந்தரின் பாதயாத்திரை .. பொது ஊடகங்களில் சிங்கள மக்கள் வெளியிட்ட கொமன்ட்கள் இவைதான். mr மகிந்தரின் பாதயாத்திரை .. பொது ஊடகங்களில் சிங்கள மக்கள் வெளியிட்ட கொமன்ட்கள் இவைதான். mr Reviewed by Madawala News on 7/29/2016 10:31:00 PM Rating: 5