Free Space

தனது நிழல் அமைச்சரவையில் முஸ்லிம்களை மறந்த மகிந்தர். mr



ஒன்றிணைந்த எதிரணி ஆட்சியமைத்தால், அதன் அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல் அமைச்சரவையொன்றை, நேற்று வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் வைத்து நிறுவியுள்ளது.

 நிழல் அமைச்சரவையின் பிரகாரம், பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இருப்பார்.   வெளிவிவகார அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும், போக்குவரத்து அமைச்சராக சமல் ராஜபக்ஷவும் இருப்பர்.

 நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன நிதியமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொருளாதார அமைச்சராகவும் இருப்பர் என்றும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஒன்றிணைந்த எதிரணியின் நிழல் அமைச்சரவையில், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த எவருமே உள்ளக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்த நிழல் அமைச்சரவையில் எவ்விதமான அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தனது நிழல் அமைச்சரவையில் முஸ்லிம்களை மறந்த மகிந்தர். mr தனது நிழல் அமைச்சரவையில் முஸ்லிம்களை மறந்த மகிந்தர். mr Reviewed by Madawala News on 7/08/2016 09:19:00 AM Rating: 5