மகிந்த எப்படி எதிர்த்தாலும் நான் ஒரு அடி­யேனும் பின்­செல்­ல­ மாட்டேன். Ms



நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யென கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலி­யு­றுத்­திய மஹிந்த ராஜ­ப க் ஷ இன்று எந்த அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை எதிர்க்­கின்றார்? என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கேள்வி எழுப்­பினார்.

சர்­வ­தே­சத்­திற்கு நாட்டை காட்டிக் கொடுக்­க­வில்லை. எனக்கு சர்­வ­தே­சத்­துடன் எந்­த­வி­த­மான தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரலும் கிடை­யாது என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் தவி­சா­ளரும், அமைச்­ச­ரு­மான மறைந்த தர்­ம­சிறி சேனா­நா­ய­க்கவின் 16 ஆவது வரு­டாந்த நினைவு தின நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வரக்­கா­பொல நகர சபை மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு கூறினார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

சர்­வ­தேச ஆத­ர­வினை இலங்­கைக்கு பெற்றுக் கொள்­வ­தற்­காக நாட்டை காட்டி கொடுப்­ப­தாக சிலர் குற்றம் சாட்­டு­கின்­றனர். நான் ஒரு­போதும் நாட்டை காட்டிக் கொடுக்­க­வில்லை. மாறாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யவின் அர­சியல் சிந்­த­னை­யையும் அவர் முன்­னெ­டுத்த வெ ளிநாட்டுக் கொள்­கை­யை­யுமே முன்­னெ­டுக்­கின்றேன். அதனை விடுத்து சர்­வ­தே­சத்­துடன் எனக்கு தனிப்­பட்ட ரீதியில் எது­வி­த­மான நிகழ்ச்சி நிரலும் கிடை­யாது.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் 65 இலட்­சத்து 50 ஆயிரம் மக்கள் என் மீது நம்­பிக்கை வைத்து நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக என்னை தெரிவு செய்து, நாட்டை என்­னிடம் ஒப்­ப­டைத்­தனர். எனவே எனது பொறுப்பை சரி­யான முறையில் நிறை­வேற்­றுவேன். எனது பொறுப்பை நிறை­வேற்­று­வதில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஒரு அடி முன்­னேக்கிச் செல்வேன் தவிர பின்­னோக்கிச் செல்ல மாட்டேன்.

அனை­வரும் இணைந்து நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் நன்மை பயக்கும் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது மரணப் பொறி என விமர்­சிப்போர் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பாரா­ளுன்ற தெரி­விக்­கு­ழுவில் உறுப்­பி­னர்­கா­ளாக அங்கம் வகிக்­கின்­றனர்.

1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­ய­போது அதனை எதிர்த்து நாட்­டுக்கு பதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் என்­பதை சிறி­மாவோ பண்­டா­ர­நா­யகா தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி வலி­ய­றுத்­தி­யது. அதன் பின்னர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இரண்டு தட­வைகள் இதனை வலி­யு­றுத்­தினார்.

மஹிந்த ராஜ­பக்ஷ இரண்டு தேர்­தல்­க­ளிலும் நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை என்­பதை தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலியுறுத்தினார். ஆனால் இன்று இதனை எந்த அடிப்படையில் எதிர்க்கின்றார் என்பது தெரியாது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளையே நான் முன்னெடுத்துச் செயல்படுகிறேன். இன்று இணக்கப்பாட்டு ஆட்சிக்குள் அனைவரும் இணைந்து செயற்படுவதே தேவைப்படுகின்றது என்றார்.
மகிந்த எப்படி எதிர்த்தாலும் நான் ஒரு அடி­யேனும் பின்­செல்­ல­ மாட்டேன். Ms மகிந்த எப்படி எதிர்த்தாலும் நான் ஒரு அடி­யேனும் பின்­செல்­ல­ மாட்டேன். Ms Reviewed by Madawala News on 7/25/2016 09:34:00 AM Rating: 5