Ad Space Available here

பெற்றோரும் மற்றோரும் விழிப்படைவோம். MUST READ- முஜீப் இப்ராஹிம் -

பெற்றோரும் மற்றோரும் விழிப்படைவோம்:

இப்போது உலக முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளின் மையப்புள்ளியானது அனைத்து இடங்களுக்கும் பொதுவானது.

அது என்னவென்றால் படிக்கவேண்டிய வயதில் இஸ்லாத்தை படிக்காமல் பாமரத்தனமாக வாழ்ந்து விட்டு பின்னர் கூகுளில் மேய்ந்து இஸ்லாம் படிப்பதும் யூ டியூப்பில் அதற்கான ஆதாரங்களை பொறுக்குவதுமாகும்!
இவ்வாறான இளைஞர்களின் மூளைகளைத்தான் வழிகேடர்கள் இலகுவில் கழுவி விடுகிறார்கள்.

பெல்ஜியத்தை ஐ. எஸ் கருங்குஞ்சுகள் தாக்கிய போது ஒரு IS விசுவாசி " பெல்ஜிய சொக்லட் மிகவும் ருசியாக இருந்தது" என்று முகநூலில் நிலைத்தகவல் ஏற்றியிருந்தார்.

அப்பாவிகள் ரத்தம் அவ்வளவு சுவையாக இருக்குமளவுக்கு அவரது மூளை கழுவப்பட்டிருக்கிறது.

இது வரை இஸ்லாமிய கிலாபத்தின் பேரால் நிகழ்த்தப்பட்ட அப்பாவி மக்கள் மீதான அனைத்து கொலைகளையும் அழிவுகளையும் அகமகிழ்வோடு கொண்டாடிய கருங்குஞ்சு ஆதரவாளர்கள் மஸ்ஜிதுன் நபவியின் வாசல் கதவுகளை பயங்கரவாதம் வந்து தட்டிய போது முதலில் "கள்ள மெளனம்" காத்தனர்!

பின்னர் ஹோட்டலில் Gas வெடித்ததென்று அண்டப்புழுகுகளை அவிழ்த்து விட்டனர். அது மனிதர்களில் இருந்து வெளியேறும் Unpleasant Gas ஐ விட அசிங்கமாக இருந்தது!

பிறகு எல்லாம் பிசுபிசுத்துப்போய் சவுதி அரசின் உத்தியோக பூர்வ அறிவிப்பானது அதனை தற்கொலை தாக்குதல் என்று உறுதி செய்ததும் " இதனை IS செய்யவில்லை" என்ற புதிய சுலோகத்தோடு இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்!

உண்மையில் களத்தில் ஆயுதங்களோடு அலையும் கருங்குஞ்சுகளின் உண்மை முகம் தெரியாமலே பலர் சமூக வலைத்தளங்களில் கருங்குஞ்சு அபிமானிகளாக, ஆதரவாளர்களாக உலாத்துகின்றனர்!

இந்த அப்பாவி இளைஞர்கள் ஒரு போதும் கனவிலும் நினைக்கவில்லை இந்த பயங்கரவாதம் நபியின் துயில் கொள்ளும் புனிதப்பூமிக்கும் வரும் என்பதை...
அதனால்தான் அந்த செய்தியை நம்ப மறுத்தார்கள், வேறுகதைகளை பொய்களாக பரப்பினார்கள்.

அவர்களது கடைசித்துளி ஈமானால் இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை!

நபி உறங்கும் பூமிக்கு மட்டுமல்ல புனித கஃபாவிற்கும் கேடு விளைவிக்க தயங்காத பாவிகள் இந்த இலுமினாட்டி கூட்டம் என்பதை இனியாவது உணருங்கள்!

இந்த I S கருங்குஞ்சுகளை பற்றி இதுவரைகாலமும் எதுவுமே எழுதவில்லை.
மிக்க பொறுமையோடுதான் காலம் நகர்ந்தது.

எமது உயிரினும் மேலான கண்மணி நாயகத்தின் காலடிக்கே பயங்கரவாதம் வந்து விட்ட பிறகு....

எல்லாவற்றையும் பேசவேண்டியிருக்கிறது!
எல்லாவற்றையும் எழுதவேண்டியிருக்கிறது!

இல்லாவிட்டால் நமது வீடுகளுக்குள்ளும் கருங்குஞ்சுகள் உருவாகிவிடும்!
இறைவா எமது இளைஞர்களை தீய பாதைகளில் இருந்து பாதுகாப்பாயாக.
அவர்களது சிந்தனைகளை செம்மைப்படுத்துவாயாக.

இலுமினாட்டிகளின் முகவர்களாக இளைஞர்களை வழிகெடுத்துக் கொண்டிருப்போரின் சதித்திட்டங்களை நிர்மூலமாக்குவாயாக.
இஸ்லாம் காட்டித்தந்த அமைதியையும், யுத்தத்தையும் சரியாக புரிந்து கொள்ளும் பக்குவத்தை தடுமாறும் இளையோருக்கு வழங்குவாயாக.
இந்த விடயங்களை உங்கள்  பிரார்த்தனைகளில் அதிகமாக இணைத்துக்கொள்ளுங்கள்.

பிரார்த்தனைதான் இப்போது பரவி வரும் வழி தவறிய சிந்தனா நோய்க்கான முதலுதவி ஆயுதமாகும். இல்லாவிட்டால் நமது வீடுகளுக்குள்ளும் கருங்குஞ்சுகள் உருவாகி விடும்


- முஜீப் இப்ராஹிம் -
பெற்றோரும் மற்றோரும் விழிப்படைவோம். MUST READ பெற்றோரும் மற்றோரும் விழிப்படைவோம். MUST READ Reviewed by Madawala News on 7/05/2016 02:41:00 PM Rating: 5