பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பபட இருந்த இலங்கை இளைஞரின் குடியுரிமை போராட்டம் வெற்றி பெற்றது. p



பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் வதிவிட குடியுரிமைக்கான போராட்டத்தில் வெற்றி பெற்ருள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் ரகுவரன் பரமேஸ்வரன் என்ற 25 வயது இலங்கை இளைஞனே இந்த வெற்றியை பெற்றுள்ளதாக பிரித்தானிய டெய்லி போஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் வசித்து வந்த நோர்தோப் ஹோல் (Northop hall) பிராந்தியத்திலுள்ள சமூக ஆர்வலர்களின் ஆதரவே இந்த வெற்றிக்கு காரணம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு தனது 13வது வயதில், அவர் தமது மாமனாருடன் பிரித்தானியாவிற்கு அகதியாக சென்றிருந்தார்.
அங்கு சென்ற நிலையில் அவர் தற்காலிக வதி விட வீசா மூலம் வசித்து வந்தார்.
தற்காலிக வீசா காலம் நிறைவடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட  அவர் கடந்த வருடம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரகுவரன் பரமேஸ்வரன், வீசா நீடிப்பு தொடர்பான ஆலோசனைகளை தமது சட்டத்தரணி வழங்கியிருக்கவில்லை என குறிப்பிட்டார்.
தனது பெற்றோரை இழந்த நிலையிலேயே அங்கு நிரந்தர குடியுரிமையை கோரியதாகவும் அதனை உறுதிப்படுத்துமாறு பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தநிலையில், பிரித்தானியா நோர்தோப் ஹோல் பிராந்திய சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பே தமக்கு குடியுரிமை கிடைக்க வழியேற்படுத்தி கொடுத்ததாகவும் இலங்கை இளைஞரான ரகுவரன் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி: http://www.madawalanews.com/2016/01/13_21.html
பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பபட இருந்த இலங்கை இளைஞரின் குடியுரிமை போராட்டம் வெற்றி பெற்றது. p பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பபட இருந்த இலங்கை இளைஞரின் குடியுரிமை போராட்டம் வெற்றி பெற்றது. p Reviewed by Madawala News on 7/14/2016 01:57:00 PM Rating: 5