Accaddemy

ஈராக் யுத்தம் அத்தியாவசியமற்றது- சில்கொட் விசாரணைகள் அறிக்கை வெளியானது. q



30ம் திகதி சனிக்கிழமை டிசம்பர் மாதம் 2006 ஆம் ஆண்டு ஈராக்கின் முன்னால் அதிபர் சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார். அவர் நல்லவரா தீயவரா என்ற கேள்விகளுக்கப்பால் அவருடைய உயிர் பிரிந்த அந்த தினம் ஹஜ்ஜுப்பெருநாள் தினமாகும்.

சரியாக பத்து வருடங்கள் கழித்து (06/06/2016)
நோன்புப்பெருநாள் தினத்தில் 500000 உயிர்களுக்கு மேல் குடித்த ஈராக் யுத்தம் தொடர்பான சில்கொட் விசாரணையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அன்றிருந்த பிரச்சினைகளுக்கு யுத்தம் ஒரு இருதி தீர்வல்ல என்றும் சதாம் ஹுசைனிடம் அணுவாயுதம் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை விட ஊகமே இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் டொனி பிளேயர் அன்று நடப்புகளை மிகைப்படுத்தியே பாராளுமன்ற அனுமதியை பெற்றார் என்பதுடன் டொனி பிளேயர் யுத்தத்துக்கு முன்னரே ஜோர்ஜ் புஷ்ஷிடம் எது நடப்பினும் ஐக்கிய ராச்சியம் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்று வாக்களித்திரந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 2015 அன்று வரை சில்கொட் விசாரணைக்காக 10.3 மில்லியன் பவுண்ட்கள் செலவழிக்கப்பட்ட நேற்று வெளியான சில்கொட் இருதியறிக்கை 2.6 மில்லியன் வார்த்தைகள் கொண்டதாகும் எனவே வரும் நாட்களில் இது தொடர்பான மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கையை தொடர்ந்து டொனி பிளேயர் நடத்திய மிக நீண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தான் முழப்பொறுப்பையும் ஏற்று மன்னிப்பு கோரினாலும் தான் சார்ந்த நியாயங்களை முன்வைப்பதிலேயே அதிக நேரத்தை செலவழித்தார்.

தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் வெளியிட்ட அறிக்கையில் தம் கட்சி சார்பாக தாம் மன்னிப்பு கோருவதாகவும் இதற்கு காரணமானவர்கள சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பிரித்தானிய இராணுவம் சார்பாக சென்று உயரிழந்த 179 இராணுவ வீர்ர்களின் குடும்பத்தினர் உட்பட பல மட்டங்களிலும் ஈராக் யுத்தத்துக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இதுவரை ஈராக் யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500000 முதல் 1000000 வரை இருக்கலாமென நம்பப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் ஒன்றில் 250 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது.

ஐக்கிய ராச்சியத்திலிருந்து
அக்குறணை ஸப்வான் ஸஹீத் 
ஈராக் யுத்தம் அத்தியாவசியமற்றது- சில்கொட் விசாரணைகள் அறிக்கை வெளியானது. q ஈராக் யுத்தம் அத்தியாவசியமற்றது- சில்கொட் விசாரணைகள் அறிக்கை  வெளியானது. q Reviewed by Madawala News on 7/07/2016 04:06:00 PM Rating: 5