(படங்கள்) நடமாட்டமும் பரபரப்பாகவும் இருக்கும் காத்தான்குடி நகரப்புறத்துக்குள் வந்து உயிரை விட்ட சிறுத்தை, s



காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியின் பெரிய சந்தைக்கு முன்னால் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

06.07.2016 புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஆரையம்பதி பிரதான வீதிக்கு சிறுத்தை ஒன்று வந்தடைந்துள்ள நிலையில் சிறிது நேரத்திலேயே அச்சிறுத்தை இறந்துள்ளது.

குறித்த சிறுத்தை எங்கிருந்து வந்தது எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு தேடி இச்சிறுத்தை நகருக்குள் வந்து பிரதான வீதியைக் கடக்கும்போது வாகனங்களில் மோதுண்டு உயிரிழந்ததா என்பது பற்றியும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சன அடர்த்தியும் எந்நேரமும் மக்கள் நடமாட்டமும் பரபரப்பாகவும் இருக்கும் ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி நகரப்புறத்துக்குள் சிறுத்தை ஒன்று பிரவேசித்திருப்பதை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர்.


(படங்கள்) நடமாட்டமும் பரபரப்பாகவும் இருக்கும் காத்தான்குடி நகரப்புறத்துக்குள் வந்து உயிரை விட்ட சிறுத்தை, s (படங்கள்) நடமாட்டமும் பரபரப்பாகவும் இருக்கும்  காத்தான்குடி நகரப்புறத்துக்குள் வந்து உயிரை விட்ட சிறுத்தை, s Reviewed by Madawala News on 7/07/2016 02:26:00 PM Rating: 5