Free Space

மளமளவென சரியும் அவுஸ்திரேலிய விக்கட்டுக்கள்.. வெற்றியை சுவைக்க தயாராகும் இலங்கை அணி. sl



சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸி அணி விக்கட்டுகளை இழந்து வருகின்றது.

 83 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி தற்போது, 161 ஒட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்த தடுமாறி வருகின்றது.

அணித்தலைவர் ஸ்மித் நிதானமாக துடுப்பெடுத்தாடிவந்த நிலையில் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஆஸி அணிக்கு ஏமாற்றமளித்துள்ளார்.

இலங்கை அணி சார்பில் ஹேரத் 4 விக்கட்டுகளை கைப்பற்றி தனது சுழல் மாயாஜாலத்தை காட்டிவருகின்றார்.

அதுமாத்திரமின்றி அறிமுக வீரர் சந்தகன் 3 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற வேண்டுமானால் இறுதி நாளான இன்று 2 விக்கட்டுகள் கைவசம் இருக்க 107 ஓட்டங்களை பெறவேண்டும்.
மளமளவென சரியும் அவுஸ்திரேலிய விக்கட்டுக்கள்.. வெற்றியை சுவைக்க தயாராகும் இலங்கை அணி. sl மளமளவென சரியும் அவுஸ்திரேலிய விக்கட்டுக்கள்.. வெற்றியை சுவைக்க தயாராகும் இலங்கை அணி. sl Reviewed by Madawala News on 7/30/2016 01:20:00 PM Rating: 5