Free Space

மன்னித்து விடுங்கள்.. எங்களை வெறுக்க வேண்டாம். sl



இலங்கை அணி அடைந்த தோல்­வி­க­ளுக்கு சிலர் எம்மை வெறுப்­பார்கள். சிலர் எங்­க­ளுக்கு ஆத­ரவாக இருப்­பார்கள். எது எப்­ப­டியோ நாம் அடைந்த தோல்­வி­க­ளுக்­காக ரசி­கர்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்­டுக்­கொள்­கிறேன் என்று தெரி­வித்­துள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ்.

அது­மட்­டு­மன்றி மீண்டும் பழைய நிலைக்கு அணி திரும்பும் என்றும் கடும் உழைப்பின் மூலம் அது சாத்­தி­ய­மாகும் என்றும் அஞ்­சலோ மெத்­தியூஸ் மேலும் தெரி­வித்­துள்ளார். நேற்­று­முன்­தினம் டுவிட்டர் பதி­வொன்­றி­லேயே அவர் மேற்­கண்­டவாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முழு­மை­யாக இழந்­தது. இந்தத் தோல்­வி­க­ளை­ய­டுத்து ரசி­கர்கள் பெரும் சோகத்தில் உள்­ளனர். இந்­நி­லை­யிலேயே அஞ்­சலோ டுவிட்டர் பதி­வொன்றின் மூல­மாக தனது வருத்­தத்­தையும், மன்­னிப்பையும் கேட்­டுக்­கொள்­வ­தாகவும் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் இலங்கை மற்றும் இங்­கி­லாந்து அணிகள் மோதும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்தப் போட்­டி­யி­லேனும் இலங்கை அணி வெற்­றி­பெற்று ஆறுதல் அளிக்­குமா என்­ப­துதான் ரசிகர்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்ள இந்தப் போட்டியோடு, இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
மன்னித்து விடுங்கள்.. எங்களை வெறுக்க வேண்டாம். sl மன்னித்து விடுங்கள்.. எங்களை வெறுக்க வேண்டாம். sl Reviewed by Madawala News on 7/05/2016 09:57:00 AM Rating: 5