Yahya

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்பாளர் ராஜ­பக்ஷ குடும்­பத்தை சேர்ந்­த­வர். sl(எஸ்.ரவிசான்) 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ
ஆகி­யோரின் பேரா­த­ரவு பெற்ற ஒரு­வ­ரையே எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­குவோம்.

அந்த நபர் தற்­போது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வ­ரா­கவோ அல்­லது ராஜ­பக்ஷ குடும்­பத்தை சேர்ந்­த­வ­ரா­கவோ இருக்­கலாம் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி ஏற்­க­னவே மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­த­வாறு அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடப் போவது இல்­லை­யென கட்­சியின் மத்­திய குழு­வுக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் ஏனைய உறுப்­பி­னர்கள் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்கும் கருத்­துக்­களை தெரி­விப்­ப­தற்­கு­மான சந்­தர்ப்­பத்தை உறுதி செய்­துள்ளார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றுகை­யி­லேயே இரா­ஜங்க அமைச்­சரும் கட்­சியின் ஊடக பேச்­சா­ள­ரு­மா­கிய டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி என்ற ரீதியில் நாம் தற்­போது எமது கூட்­ட­மைப்­பினை ஸ்திர­த்தன்­மையுடன் கொண்­டு­வ­ரு­வது உட்­பட கட்­சியின் பிளவு தன்­மை­யினை இல்­லாமல் செய்­வ­து தொடர்பில் பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்றோம். அந்­த­வ­கையில் அடுத்து நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல், ஜனா­தி­பதி தேர்­தலை மைய­மாக கொண்டே தற்­போது செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

அந்­த­வ­கையில் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மஹிந்த ராஜ­பக்ஷ, சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்க குமா­ர­துங்க ஆகி­யோரின் பேரா­த­ரவு பெற்ற ஒரு­வ­ரையே நாம் ஜனா­தி­பதி வேட்­பா­ளா­ராக கள­மி­றக்க தீர்­மா­னித்­துள்ளோம்.

 தெரிவு செய்­யப்­படும் அந்த வேட்­பாளர் தற்­போது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு­வ­ரா­கவோ அல்­லது ராஜ­பக் ஷ குடும்­பத்தை சேர்ந்த ஒரு­வ­ரா­கவோ இருக்­கலாம். இவ்­வி­டயம் தொடர்பில் உரிய நேரத்தில் கட்­சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கில் சரி­யான தீர்­மா­னத்தை எடுப்போம்.

தேசிய அர­சாங்­கத்தில் அங்­கத்­துவம் பெறும் நாம் பல்­வேறு மாறுப்­பட்ட கருத்­துக்­களின் மத்­தியில் உரிய செயற்­பா­டு­களை முன்­னெடுத்து வரு­கி­ன்றோம். அந்­த­வ­கையில் ஒரு­சிலர் சில­வற்றை மறந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் பத­விக்கு கொண்­டு­வர வேண்டும் என்று செயற்­ப­டு­கின்­றனர். 19 திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மஹிந்த ராஜ­பக் ஷ ­வுக்கும் சந்­தி­ரி­கா­வுக்கும் இனி ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடி­யாது. அந்­த­வ­கையில் தற்­போது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­யினை நீக்­கு­வது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்­றது.


ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் எதிர்­வரும் தேர்­தல்­களில் வெற்றி பெற­வேண்­டு­மாயின் கட்­டா­ய­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவு அவ­சியம். இதனை கடந்த தேர்தல் எமக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்த அடிப்­ப­டை­யி­லேயே எமது கட்­சியின் அடுத்­தக்­கட்ட அர­சியல் முன்­னெ­டுப்­புக்கள் அமைய வேண்டும்.

கேள்வி: ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் பதுளை கூட்­ட­மா­னது சுதந்­திர கட்­சிக்கு சவால் என கரு­து­கின்­றீர்­களா?

பதில்: - இல்லை ஒரு போதும் இல்லை. பதுளை நகரில் இரண்டு நாட்­க­ளாக நடை­பெற்ற இரு கூட்­டங்­களை கொண்டு நோக்கும் போது இந்த கூட்டம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கோ சவால் எமக்கு இல்லை

கேள்வி: - கட்­சி­யினை ஒன்­றி­ணைத்தால் எதிர்­வரும் தேர்­தலில் வெற்றி பெறலாம் என நீங்கள் நினைக்­கின்­றீர்­களா?

பதில்: - ஆம் நிச்­ச­ய­மாக கட்­சி­யினை ஒன்­று­ப­டுத்தும் முக­மா­கவும் பிள­வு­ப­டு­வதில் இருந்து பாது­காக்­கவும் நாம் மறை­மு­க­மாக பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்றோம்; இதன் மூலம் வெற்றி பெறலாம்

கேள்வி: - ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் சுதந்­தி­ரக்­கட்­சி­யினை பிள­வுப்­ப­டுத்த நினைப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது அவ்­வா­றாயின் இதனை ஏன் முன்னாள் ஜனா­தி­ப­தியா தலைமை தாங்கி நடத்­து­கிறார்.

பதில்: - ஒரு போதும் இல்லை மஹிந்த ராஜ­பக்ஷ கட்­சி­யினை நேசிப்­பவர். அவர் இதனை முன்­னெ­டுக்க வில்லை. மஹிந்­தவின் படங்­களை காட்டி அர­சியல் நடத்த எதிர்­பார்க்கும் விமல் விர­வன்ச, கம்மன்­பில போன்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பசில் ராஜ­ப­க் ஷ­வுடன் ஒன்­றி­ணைந்து ஐக்­கிய தேசி­யக்­கட்சியின் டீல் மூல­மா­கவே இதனை முன்­னெ­டுக்­கின்­றனர். இருந்த போதிலும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியில் இருக்கும் எமது கட்­சியின் உறுப்­பி­னர்கள் அதற்கு இட­ம­ளிக்க மாட்­டார்கள்.

கேள்வி: ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை
ஆணை­யாளர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­
பி­லான மக்கள் கருத்­து­க்க­ணிப்பு அடுத்த வரு­டத்­திற்குள் இடம் பெற­வேண்டும் என தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: - ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போன்று புதிய அரசியலமைப்பு செயற் பாடுகள் தொடர்பில் அவர் எமக்கு கட்டளை
களை விதிக்க முடியாது. எதை எந்த தருணத்தில் உரியவாறு செய்ய வேண்டும் என்பதனை நாமே தீர்மானிப்போம்.

கேள்வி: - புதிய அரசியலமைப்பில் இரண்டு
கட்சியின் பிரதிநிதிகளும் தற்போதுவரை உள்ளடக்கப்பட வேண்டும் என எதிர்பார்த் துள்ள விடயம் என்ன?

பதில்: - தேர்தல் முறையில் கட்டாயமாக மாற்றம் அவசியம் என்பதனை இரண்டு கட்சிகளுமே தற்போது வலியுறுத்தி உள்ளன.
சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்பாளர் ராஜ­பக்ஷ குடும்­பத்தை சேர்ந்­த­வர். sl சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்பாளர்  ராஜ­பக்ஷ குடும்­பத்தை சேர்ந்­த­வர். sl Reviewed by Madawala News on 7/08/2016 09:38:00 AM Rating: 5