Oceas

சிறு பிள்­ளைகள் கடைகளில் டொபி வாங்கினாலும் இந்த அரசு வற்­ வரி அறவிடுகிறது. t



(ப.பன்­னீர்­செல்வம்)

என்­னுடன் குரோதம் இருந்தால் என்­னையும் என் குடும்­பத்­தையும் சிறையில் அடை­யுங்கள். அதை­வி­டுத்து எனது பிர­தேச கிராம மக்­களை பழி­வாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

எமது ஆட்சிக் காலத்தில் குடி­சைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதற்கு மாறாக வச­தி­யான வீடுகள் அமைத்­துக் ­கொ­டுக்­கப்­பட்­டன என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஹுங்­கம அத்­பு­டுவ விஹா­ரையில் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற மத வைப­வத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இன்று அர­சியல் ரீதி­யாக கைது செய்­யப்­ப­டு­ப­வர்கள் உள­ரீ­தி­யாக மட்­டு­மல்ல உடல் ரீதி­யா­கவும் இம்­சிக்­கப்­ப­டு­கின்­றனர். இன்று எப்.சி.ஐ.டி, சிஐடி என்­பன நாட்டு மக்­க­ளையும் அர­சி­யல்­வா­தி­க­ளையும் அடக்­கு­மு­றைக்கு உள்­ளாக்கும் நிறு­வ­னங்­க­ளாக மாறி­யுள்­ளன.

அர­சி­யல்­வா­தி­களை சிறையில் அடைத்து அவர்­க­ளுக்கு மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­து­வது மட்­டு­மின்றி உடல் ரீதி­யா­கவும் இம்­சைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வாறு நாட்டு மக்கள் மீது அரசு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­கின்­றது. செல்­வந்­தர்­க­ளிடம் வரி அற­வி­டு­வ­தாகத் தெரி­விக்கும் அர­சாங்கம் இன்று குடிசை வாழ் மக்­க­ளிடம் வரி­களை அற­விட ஆரம்­பித்­துள்­ளது. சாப்­பாட்டுப் பொதி வாங்­கி­னாலும் சிறு பிள்­ளைகள் கடைகளில் இனிப்­பு­களை வாங்­கி­னாலும் அவற்­றிற்கும் வற்­வரி அற­வி­டப்­ப­டு­கின்­றது.

எமது ஆட்­சிக்­கா­லத்தில் குடி­சைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதற்குப் பதி­லாக வச­தி­யான வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­பட்­டன. ஆனால் இன்று குடி­சைகள் உரு­வாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

நாடு முன்­னேற்­ற­ம­டை­வ­தையே நாமும் விரும்­பு­கிறோம். எமது பிர­தேச கிராம மக்­களை பழி­வாங்க வேண்டாம். என்னோடு இருக்கும் குரோதத்திற்காக எமது பிரதேச மக்களை பழிவாங்காதீர்கள். கிராமங்களை அபிவிருத்தி செய்யுங்கள்.

என்னையும் என் குடும்பத்தினரையும் சிறையில் அடையுங்கள். ஆனால் மக்களை இம்சிக்க வேண்டாம் என்றார்.

சிறு பிள்­ளைகள் கடைகளில் டொபி வாங்கினாலும் இந்த அரசு வற்­ வரி அறவிடுகிறது. t சிறு பிள்­ளைகள் கடைகளில் டொபி வாங்கினாலும் இந்த அரசு  வற்­ வரி அறவிடுகிறது. t Reviewed by Madawala News on 7/05/2016 09:34:00 AM Rating: 5