tg travels

துருக்கி ராணுவ புரட்சிக்கான முயற்சி: ஆரம்பமும் முடிவும். ஒரு விரிவான பார்வை. t

இன்று இரவு துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் அந்நாட்டின் கட்டுப்பாட்டை தனதாக்கி கொண்டதாக ராணுவத்தரப்பில் செய்திகள் வெளியாகி உலக சர்வதேஸ் ஊடகங்கள் எங்கும் அதுவே பேசுபொருளாகஇருந்தது.

.
ராணுவ புரட்சியை மேற்கோளும் முயற்சிகளில் ராணுவம்முதலில் செய்வது அந்நாட்டின் தொலைகாட்சி தொடர்பாடல்களை கைய்யகப்படுத்துவதையே.இதுவே இம்முறையும் துருக்கியில் நடந்தது.அதனையே ராணுவம் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதாக ஊடகங்கள் சொல்லவும் மக்கள் நம்பவும் காரணமாக ஆகியது.இஸ்தன்பூல் விமான நிலையம் முதல் பல அரச ,ராணுவ,பாதுகாப்பு,சிவில் அலுவலகங்கள் ராணுவ புரட்சியாளர்களிடம் இறந்து மீட்டப்பட்டதாக தற்போதைய தகவல் சொல்கின்றன.
.

ராணுவ புரட்சிக்கு முயற்சித்த ராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டும் சரணடைந்தும் உள்ள நிலையில் ராணுவத்தின் மேல்மட்டத்தின் முதல் நிலை தளபதி முதல் ஏழாம் நிலை தளபதிவரை ராணுவ புரட்சியை செய்தவர்களை கண்டித்துள்ள நிலையில் வான்படை அதிகாரிகள் எவரும் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக செயல்படுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.

புரட்சிக்கு காரணமானவர்கள் அப்துல்லா கொலனுக்கு நெருக்கமான இராணுவப்பிரிவினர் என்று ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ள நிலையில் தான் இப்புரட்சியை ஏற்கப்போவதில்லை என்று அப்துல்லா கோலான் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் எதிர்கட்சிகள் ராணுவ புரட்சியை எதிர்த்துள்ள அறிக்கைவிட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன.

.
அங்காராவில் அதிகமான குண்டுவெடிப்புகள்,பாரிய சத்தங்கள்,பாராளும்னரத்தை நோக்கிய வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பல போலீசார் இறந்துள்ளதகாவும் அல்ஜசீரா,அல் அரபியா செய்தி நிறுவங்கள் தெரிவிக்கின்றன.
.

இந்த ராணுவ புரட்சிக்கு முக்கிய சூத்திரதாரியாக "புர்சா" மாநிலத்தை சேர்ந்த ராணுவ தளபதியே உள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

.
தற்போது ரஜப் தய்யிப் எர்துகான் அங்காராவில் இருந்து இஸ்தன்பூல் விமான நிலையத்துக்கு வந்திறங்கி தொலைகாட்சியில் உரையாடுகிறார்.

.
இது புரட்சி ஏற்பட்டதில் இருந்து எர்துகானின் மூன்றாவது உரையாகும்.ஏற்கனவே தொலைபேசி ஊடாக மக்களை ராணுவ புரட்சிக்கு எதிராக ஆர்பாட்டத்துக்கு அழைத்திருந்தார்.ராணுவ புரட்சிக்கு எதிராக ஆர்பாட்டத்துக்கு வந்த மக்களுக்கு நன்றி செலுத்தியதோடு அவரது பதிவு செய்யப்பட்ட உரை முடிவுற்றது.

.
துருக்கிய பாறாளுமன்றத்தை நோக்கி புரட்சிப்படை மூன்றுமுறை தாக்கியபோதும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று அல்ஜசீரா சேவை கூறியுள்ளது.பாராளும்னரத்தை தாக்க முயற்சித்த ராணுவ பிரிவினரில் சிலரை கைது செய்ததாகவும் நாளை விடிந்தவுடன் புரட்சியாளர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை மேட்கொள்ளப்படும் என்றும் துருக்கிய அரசு அறிவித்துள்ளதாக அல்ஜசீரா சேவை கூறுகிறது.
.

ரஜப் தய்யிப் எர்துகான் விமான நிலையத்தை நோக்கி மக்களை அழைத்ததற்கு இணங்க அவரை ஸ்தன்பூல் விமானநிலையத்தில் வரவேற்க மக்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் ராணுவ புரட்சி தோல்வியில் முடிந்துள்ளதை உணர முடிகிறது.
.

AHAMEDSHA AHAMED JAMSATH
TURKEY

துருக்கி ராணுவ புரட்சிக்கான முயற்சி: ஆரம்பமும் முடிவும். ஒரு விரிவான பார்வை. t துருக்கி ராணுவ புரட்சிக்கான முயற்சி: ஆரம்பமும் முடிவும்.
 ஒரு விரிவான பார்வை. t Reviewed by Madawala News on 7/16/2016 08:16:00 AM Rating: 5