Oceas

மிசெல் ஒபாமாவிடம் திருடி சிக்கிக்கொண்ட மெலா­னியா டிரம்ப். t



அமெ­ரிக்க குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிய­மனம் செய்­வது தொடர்பான தேசிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் அந்தக் கட்­சியின் உத்தேச ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் டிரம்பின் மனை­வி­யான மெலா­னியா ஆற்­றிய உரை பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது.

அந்த உரை­யா­னது 2008 ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா பங்­கேற்ற மாநாட்டின் போது அவ­ரது மனைவி மிசெல் ஒபாமா ஆற்­றிய உரையை ஒத்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி உரையின் போது மெல­னியா, கரு­ணை­மிக்க ஒரு­வ­ரான தனது கணவர் நாட்­டுக்­காக போரா­ட­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் தனது கண­வரின் தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக ஆற்­றிய முத­லா­வது உரை இது­வாகும். அவர் அந்த உரையை உரை எழுதும் குழு­வி­னரின் உத­வி­யுடன் தயா­ரித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப்பின் தொடர்­பாடல் ஆலோ­சகர் ஜேஸன் மில்லர் தெரி­விக்­கையில், மெலா­னி­யாவின் எழுத்தா­ளர்கள் குழு­வினர் அவ­ரது சொந்த அபிப்­பி­ரா­யங்­களைப் பிர­தி­ப­லிக்கும் கருத்­து­களைக் குறிப்­பெ­டுத்தே எ­ழு­தி­ய­தாக தெரி­வித்­தனர்.

அதே­ச­மயம் டொனால்ட் டிரம்ப் விப­ரிக்­கையில், தனது மனை­வியின் உரை வியக்­கத்­தக்­க­தாக இருந்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

ஸ்லோவே­னி­யாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட முன்னாள் மொடல் அழ­கி­யான மெலா­னியா தனது உரையின் போது, தனது கணவர் கடு­மை­யான ஒரு­வ­ராக தோன்­றி­னாலும் அன்­பான நீதி­யான கரி­ச­னை­யுள்ள ஒருவர் எனத் தெரி­வித்தார்.
“அவ­ரது அன்பை எப்­போதும் அவ­தா­னிக்க முடி­யாது. ஆனால் அது அனை­வரும் பார்க்கக் கூடிய விதத்தில் அங்கு உள்­ளது. அத­னா­லேயே நான் அவ­ரிடம் காதலில் வீழ்ந்தேன்" என அவர் கூறினார்.

மெலா­னியா உரை­யாற்­றிய போது ஆரம்­பத்தில் அவ­ரது உரைக்கு பெரும் வர­வேற்பு கிடைத்­தி­ருந்த போதும், அந்த உரை சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­ய­தை­ய­டுத்து அந்த உரை­யி­லுள்ள பல கருத்­துகள் மிசெல் ஒபா­மாவின் உரை­யி­லி­ருந்து கள­வா­டப்­பட்­டுள்­ள­தாக விமர்­சிக்­கப்­படுகிறது.

மேற்படி மாநாட்டின் போது வன்முறை கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரண மாக அந்த மாநாடு இடம்பெற்ற இடத்தைச் சூழ்ந்துள்ள இடங்களின் பாதுகாப்பு என்று மில்லாதவாறு அதிகரிக்கப்பட்டிருந்தது.
மிசெல் ஒபாமாவிடம் திருடி சிக்கிக்கொண்ட மெலா­னியா டிரம்ப். t மிசெல் ஒபாமாவிடம் திருடி சிக்கிக்கொண்ட  மெலா­னியா  டிரம்ப். t Reviewed by Madawala News on 7/20/2016 10:43:00 AM Rating: 5