(Talent) நிகழ்வுக்கு விண்ணப்பம் கோரல் ...

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர்  சேவைகள்  மன்றம்ஆகியன இனணந்து நடாத்தும் தேசிய வேலைத்திட்டம்பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டபிள்யு.ஜீ.எஸ்.எரந்திகவின்தலைமையில்யூத் கொட் டலன்ட்  (Youth got talent) என்றசெயத்திட்டம் நாடு பூராகவும் செயற்படுத்தப்படவுள்ளது.

மற்றவரால் செய்ய முடியாத வித்தியாசமான செயற்பாடு (Talent), 13-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்யுவதிகளாகிய  உங்களிடம் இருக்குமானால்உடனேஉங்களுடைய பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரியைதொடர்பு கொண்டு அங்கே விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுபூரணப்படுத்தி எதிர்வரும்  27.07.2016ஆம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக ஒப்படைக்குமாறும் இளைஞர்யுவதிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

மேலும் இளைஞர்யுவதிகள் உங்கள் ஊருக்குத் தேவையானபெறுமதியான (project) ஒன்றைத் தயார்படுத்தி எதிர்வரும்27.07.2016 ஆம் திகதிக்கு முன் உங்கள் பிரதேசசெயலகத்திலுள்ள இளைஞர் சேவை அதிகாரியிடம்ஒப்படைக்குமாறும் அதில் தெரிவு செய்யப்படும் சிறந்த (project)க்கு பெறுமதியான பணப் பரிசில்களும் வழங்கவிருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களைப் பெற உங்கள் பிரதேச இளைஞர்சேவை அதிகாரியைத் தொடர்பு கொள்ளுமாறும் இளைஞர்யுவதிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான (Talent) திறமையைவெளிக்காட்டும் நிகழ்வுகல்லடி பாலத்திற்கு அருகில்2016.08.06ம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎனவும்  065-2224367077-787 4472 என்ற தொலைபேசிஇலங்கங்களுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு  மாவட்டஇளைஞர்யுவதிகள் மேலதிக தகவல்களைப் பெறலாம் எனவும்கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் எமக்குத்தெரிவித்தார்.

(Talent) நிகழ்வுக்கு விண்ணப்பம் கோரல் ... (Talent) நிகழ்வுக்கு விண்ணப்பம் கோரல்  ... Reviewed by Madawala News on 7/19/2016 09:31:00 PM Rating: 5