Accaddemy

தொடர்ந்து T.V பார்த்ததற்காக மகளை அரி­வாளால் வெட்­டிய தந்தை.. மட்­டக்­க­ளப்பு பிரதேசத்தில் சம்பவம். (மகள் சீரியஸ்)



இரவு முழுக்க தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்த மகளை அரி­வாளால் வெட்­டிய குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்ட தந்­தையை எதிர்­வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்ற நீதீவான் எம்.கணே­ச­ராஜா உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். கடந்த வியாழனன்று இச் சம்பவம் மட்­டக்­க­ளப்பு கோர­கல்­லி­மடு கிரா­மத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது, இரா­சையா சசி­கலா (வயது 28) என்­பவர் அரிவாள் வெட்­டுக்­குள்­ளான நிலையில், சந்­தி­வெளிப் பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு, பின்னர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்றார்.

இரவு முழுக்க தொலைக்­காட்சி பார்த்து ஏனை­யோரின் உறக்­கத்தை குழப்ப வேண்­டா­மென்று தந்தை தொடர்ந்து கூறி­வந்தார்.. அவ்­வாறே, சம்­ப­வ­தி­னத்­தன்றும் சகோ­தரி தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது ஆத்­தி­ர­ம­டைந்த தந்தை சகோ­த­ரியை அரி­வாளால் வெட்­டினார் என மற்­று­மொரு சகோ­தரி பொலிஸில் வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்பில் 68 வய­து­டைய சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய பின்னர் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தற்­கி­ணங்க இவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.ய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து T.V பார்த்ததற்காக மகளை அரி­வாளால் வெட்­டிய தந்தை.. மட்­டக்­க­ளப்பு பிரதேசத்தில் சம்பவம். (மகள் சீரியஸ்) தொடர்ந்து T.V பார்த்ததற்காக மகளை அரி­வாளால் வெட்­டிய தந்தை.. மட்­டக்­க­ளப்பு பிரதேசத்தில் சம்பவம். (மகள் சீரியஸ்) Reviewed by Madawala News on 7/31/2016 12:57:00 PM Rating: 5