Free Space

உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போல் வேண்டும். கோரிக்கை விடப்பட்டது. u



ரசியாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று கொழும்பு கோட்டை நீதவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த பிடிவிராந்தை இன்டர்போல் பொலிஸாரின் ஊடக பிறப்பிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கோரப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2005ஆம் ஆண்டு, இலங்கை விமானப் படைக்காக கொள்வனவு செய்த மிக் விமானம் தொடர்பிலான நிதி முறைகேடுகள் குறித்தே விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாக தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறிப்பிட்ட நபர் மகிந்த  ராஜபக்ச அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்ற வேளை அவரை சந்தித்த படங்கள் ஊடகங்களில் வெளியானது  குறிப்பிடத்தக்கது.
உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போல் வேண்டும். கோரிக்கை விடப்பட்டது. u உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போல் வேண்டும். கோரிக்கை விடப்பட்டது. u Reviewed by Madawala News on 7/15/2016 02:44:00 PM Rating: 5