Free Space

நிஷா பிஷ்வால் இலங்­கைக்கு அடிக்கடி வருகிறார்.. சிங்­க­ள­வர்­க­ளுக்கு நாடில்­லாமல் போக போகிறது.. சொல்லிட்டேன். ug



நிஷா பிஷ்வால் இலங்­கைக்கு 6 தட­வைகள் வந்­தது உள்­ளூரில் மாப்­பிள்ளை தேடு­வ­தற்கு அல்ல என தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, அமெ­ரிக்­காவின் திட்­டங்கள் முறை­யாக நடை­பெ­று­கின்­றதா? என்­பதை கண்­கா­ணிக்­கவே அடிக்­கடி வந்து சென்றார். சிங்­க­ள­வர்­க­ளுக்கு நாடில்­லாமல் போகும் நிலையே ஏற்­படப் போகின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் உதவி செய­லாளர் நிஷா பிஷ்வால் அண்­மையில் இலங்­கைக்கு வந்து சென்றார். 20 மாதங்­களில் 6 தட­வைகள் அவர் இலங்கை வந்து சென்­ற­தாக குறிப்­பிட்டார். அவர் ஏன் இங்கு வந்தார்? தனது திரு­ம­ணத்­திற்கு மாப்­பிள்ளை பார்க்­கவா? இல்லை. சிலாபம் பக்கம் தென்னம் தோப்பை வாங்கி, பின்னர் அந்தப் பக்கம் போகும் போது அதனை பார்த்துக் கொள்ளும் கங்­காணி ஒழுங்­காக செயற்­ப­டு­கின்­றாரா? என்­பதை கண்­கா­ணிக்கும் வழக்கம் எமது செல்­வந்­தர்கள் மத்­தியில் உள்­ளது.

இதே போன்று நில­மையில் தான் இன்று இலங்கை உள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கங்­கா­ணியின் வேலையை தான் செய்­கின்றார். அமெ­ரிக்­காவின் தோட்­ட­மாக இலங்கை உள்­ளது. வடக்கு மற்றும் கிழக்கை இந்­தி­யா­விற்கும் நாட்டின் ஏனைய பகு­தி­களை அமெ­ரிக்­காவும் தன­தாக்­கிக் ­கொள்ளும் நட­வ­டிக்கை தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. நாடு பொரு­ளா­தார ரீதியில் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­துள்ள நிலையில் இலங்கை பாரிய முன்­னேற்றம் கண்­டுள்­ள­தாக நிஷா பிஷ்வால் கூறு­கின்­றமை ஆச்­ச­ரியம் அளிக்கின்றது.

 அடுத்த தடவை அவர் இலங்கை வந்தால் நிச்சயம் நிஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை வாங்கி நான் போட்டு பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நிஷா பிஷ்வால் இலங்­கைக்கு அடிக்கடி வருகிறார்.. சிங்­க­ள­வர்­க­ளுக்கு நாடில்­லாமல் போக போகிறது.. சொல்லிட்டேன். ug நிஷா பிஷ்வால் இலங்­கைக்கு அடிக்கடி வருகிறார்.. சிங்­க­ள­வர்­க­ளுக்கு நாடில்­லாமல் போக போகிறது.. சொல்லிட்டேன். ug Reviewed by Madawala News on 7/20/2016 11:17:00 AM Rating: 5