Tuesday, July 5, 2016

ஐக்கிய ராச்சியத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு ஓர் மடல்.... uk

Published by Madawala News on Tuesday, July 5, 2016  | ஐக்கிய ராச்சியத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு ஓர் மடல்....
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் !

ஈராக் யுத்தம் 20 ஆம் திகதி மார்ச் மாதம் 2003 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை சுமார் 500000 உயிர்களை பலியெடுத்திருக்கிறது.

( எண்ணிக்கை PLOS Medicine survey யிலிருந்து ) இந்த யுத்தம் சம்பந்தமாக 2009 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே CHILCOT INQUIRY அதாவது  இந்த யுத்தம் சம்பந்தமாக முழு விசாரணை செய்வதே இந்த ஆணைக்கழுவுக்கு வழங்கப்பட்ட வேலையாகும்.  சதாம் ஹுசைன் ஆட்சியில் எந்த அணுவாயிதமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அன்றைய பிரதமர் டொனி பிளேயர் இந்த யுத்தத்தை புஷ்ஷுடன் இணைந்து சட்டவிரோதமாக ஆரம்பித்தார் என்ற கருத்து வலுவடைந்து வரும் நிலையில் நாளை (06/07/2016) இந்த விசாரணைகள் முழுமை பெற்று வெளியிடப்படவுள்ளது.

இதுவரை பிரித்தானிய படையிலிருந்து 179 இராணுவ வீர்ர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே டொனி பிளேயரை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து யுத்தத்துக்கு எதிராக செயற்பட்டவரே இன்றைய தொழிலாளர் கட்சி (Labour Party ) தலைவர் ஜெரமி கோர்பின் ( Jeremy Corbyn) அவர் சென்ற செப்டம்பர் மாதம் (2015) வரலாறு காணாத 60% வாக்குகளுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரே இந்த ஜெரமி கோர்பின்.

அவர் எதிர்கொண்ட அனைத்து சிறு தேர்தல்களிலும் வெற்றி கொண்டிருந்த போதும் ஐரோப்பிய கருத்துக்கணிப்புக்குப்பின்னர் அவருக்கு எதிரான கருத்துக்கள் கட்சிக்குள் வலுவடைந்து நம்பிக்கையில்லா பிரேரணை வரை கொண்டு சென்றது அதில் அவர் 172 க்கு 40 என்ற ரீதியில் தோல்வியுற்றார் எனினும் இந்நாட்டை பொருத்தவரை கட்சியின் உருப்பினர்களே தலைவரை தெரிவு செய்வர் எனவே தனக்கு வாக்களித்த 251,417 ( மொத்தம் 422,871) உருப்பினர்களின் நம்பிக்கையை விட்டுச்செல்ல மாட்டேன் என்று மிக உறுதியாக கட்சியை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனினும் அவருக்கெதிராக தலைவர் போட்டி ஒன்று வரும் என்ற நம்பிக்கையில் கடந்த வாரம் மட்டும் 60000 பொதுமக்கள் தொழிலாளர் கட்சி அங்கத்துவம் பெற்றிருக்கின்றனர் கோர்பினுக்கு ஆதரவு வழங்குவதற்காக மட்டும்.

ஜெரமி கோர்பினுடைய கொள்கைகள் மிக அதிகமானவர்களால் விரும்பப்படும் அதே வேளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் மிக்க் குறைவாக செலவீனங்களுக்கான தொகையை பெறுபவராகவும் உள்ளார். தெழிலாளர் உரிமைகளுக்காக ஆரம்பத்திலிருந்தே போராடி வரும் இவர் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரானவராகவும் செயற்பட்டுவருகின்றார்.

இப்படியான மக்களால் கொண்டாடப்படும் ஒரு தலைவரை தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக்கு அனுப்ப முயற்சிப்பது ஏன்?
வலதுசாரி ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் இவருக்கு எதிராக முன்பக்க மற்றும் தலைப்பு செய்திகளை பரப்பி வருவதன் நோக்கம் என்ன?

CHILCOT INQUIRY முடிவுகள் வெளியானவுடன் Jeremy Corbyn தன் கட்சியின் முன்னால் தலைவரும் முன்னால் பிரதமருமான Tony Blair நீதிக்கு முன்னே நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புபவராகவும் தன் கட்சி சார்பாக மன்னிப்பு கோருவார் எனவும் இதனை தடுப்பதற்கே பிளேயர் மற்றும் வலதுசாரிகள் அவருக்கு எதிராக செயற்பட்டு அவரை தொடர்ந்தும் பதவி விலகுமாறு கோரி வருகின்றனர் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மற்ற எல்லா காரணங்களையும் ஒரு ஓரமாக வைத்தாலும் ஈராக்கில் உயிர் நீத்த நமது உறவுகளுக்காக நாம் என்ன செய்தோம் ? 


என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? என்ன செய்யப்போகிறோம்? 

எமக்காக போராட ஒரு தலைவர் முன்வரும் போது நாம் அவருக்கு பக்கபலமாக இருப்பது எங்கள் கடமையில்லையா ?

என்னால் முடிந்தளவு தகவல்களை தந்துள்ளேன் பிழை ஏதுமிருப்பின் மன்னித்து எனக்கும் அறியத்தாருங்கள்.

நன்றியுடன் அக்குறணை ஸப்வான் ஸஹீத் 

குரோலி ஐக்கிய ராச்சியத்திலிருந்து. 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top