Free Space

இனிமேல் இங்கிலாந்து செல்ல விரும்பும் இலங்கையர்கள் இணையத்திலே இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும். uk



இலங்­கை­யி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­ய­மா­னது , புதிய இணை­யத்­தள விண்­ணப்பப் படி­வத்தைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்­கான விசாக்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மிகவும் இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும் என அறி­வித்­தள்­ளது.

'அக்சஸ் யு.கே.' என்­ற­ழைக்­கப்­படும் இந்த இணை­யத்­தள விண்­ணப்பப் படிவம் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட தர்க்க ரீதி­யான கேள்­வி­க­ளு­ட­னான குறு­கிய படிவம்,

எடுத்துச் செல்­லக்­கூ­டிய நட்­பு­ற­வான முறைமை, அனு­ம­தி­யின்றி பய­ணத்தை மேற்­கொள்ளக் கூடிய ஐரோப்­பிய ஷெங்கன் பிராந்­திய நாடு­க­ளுக்­கான விசா படி­வங்­களின் பதி­வி­றக்கம் ஆகிய வச­திகள் உள்­ள­டங்­க­லாக ஒரு தொகை அனு­கூ­லங்­களை வழங்­கு­வ­தாக உள்­ளது.

பிரித்­தா­னிய விசா­வுக்கு விண்­ணப்­பிக்க விரும்பும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விரை­வா­னதும் இல­கு­வா­ன­து­மான விசா சேவையை வழங்க பிரித்­தா­னியா அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ள­தாக பிரித்­தா­னிய விசாக்கள் மற்றும் குடி­வ­ர­வுக்­கான தென் மற்றும் தென் கிழக்கு ஆசியப் பணிப்­பாளர் நிக் குரோச் தெரி­வித்தார்.

மேற்­படி 'அக்சஸ் யு.கே.' விசா விண்­ணப்பப் படிவம் 2014 ஆம் ஆண்டில் சீனாவில் வெற்­றி­க­ர­மாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட­போது , அதற்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பெரும் வர­வேற்புக் கிடைத்­த­தாக குறிப்­பிட்­டுள்ள கொழும்­பி­லுள்ள பிரித்­தா­னிய தூத­ரகம், மேற்­படி விசா விண்­ணப்ப முறை­மை­யா­னது இலங்­கை­யி­லி­ருந்து வாடிக்­கை­யா­ளர்கள் பிரித்­தா­னி­யா­வுக்கு விஜயம் செய்­வதை ஊக்­கு­விக்கும் என நம்­பு­வ­தாக தெரி­வித்­தள்­ளது.

வர்த்­தக உற­வுகள் மற்றும் கலா­சார பரி­மாற்றம் என்­ப­வற்­றி­னூ­டாக பிரித்­தா­னி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் பல­மான உறவு நில­வு­வ­தாக இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்தார்.

மேற்­படி விசா விண்­ணப்ப முறை­மை­யி­னூ­டாக வர்த்­தக மற்றும் சுற்­றுலா விசாக்­க­ளுக்கு இல­கு­வாக வண்­ணப்­பிக்க முடியும் என அவர் கூறினார்.
மேற்­படி 'அக்சஸ் யு.கே.' விசா விண்­ணப்­பப்­ப­டி­வத்தை www.gov.uk/apply-uk-visa என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம் ஏனைய வழிமுறைகளில் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்காக Visa4UK இணையத்தள முகவரி தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும் என அந்தத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இனிமேல் இங்கிலாந்து செல்ல விரும்பும் இலங்கையர்கள் இணையத்திலே இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும். uk இனிமேல் இங்கிலாந்து செல்ல விரும்பும் இலங்கையர்கள் இணையத்திலே இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும்.  uk Reviewed by Madawala News on 7/29/2016 08:48:00 AM Rating: 5