( Video இணைப்பு) ஐ.எஸ். அமைப்பு யார்..? நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு அசத்தல் தெளிவு படுத்தல்.



ஐ.எஸ். அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம் எனவும், அதன் நடவடிக்கைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும் பெரும்பாலான உலக நாடுகளுக்கு முன்னர் தீர்க்கமான ஒரு முடிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையே முன்வைத்தது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

“சர்வதேச பயங்கரவாதம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு சவாலா ?” எனும் தலைப்பில்  தெரண தனியார் தொலைக்காட்சி சேவையில் புதிய பாராளுமன்றம் (அலுத் பார்ளிமென்துவ) எனும் நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை முஸ்லிம்களிடையே ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பில் தெளிவுபடுத்த வெள்ளிக்கிழமை நாட்களில் முஸ்லிம்கள் கட்டாயம் கலந்துகொள்ளும் ஜும்ஆ பிரசங்கங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பயன்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு பற்றிய தவறான கருத்துக்கள் நாட்டில் பரவலாக காணப்படுகின்றது. அதற்கும் சர்வதேச அமைப்புக்களுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மைக் காலமாக கூறப்பட்டது. இது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள் என நிகழ்ச்சியை நடாத்திய ஊடகவியலாளர் இடையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கையிலுள்ள முஸ்லிம் உலமாக்களை கொண்டு இயங்கும் ஒரு பெரும் அமைப்பாகும். இதற்கு பாராளுமன்ற சட்ட அனுமதி காணப்படுகின்றது. நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தொடர்பான தீர்மானங்களை அறிவிக்க இந்த அமைப்புக்கே அதிகாரம் உள்ளது.

அண்மையில், நாட்டில் இடம்பெற்ற இனவாத நடவடிக்கைகளின் போது முஸ்லிம் கிராமங்கள் தோறும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து வழிப்படுத்தும் பணியில் அந்த அமைப்பின் பணி மகத்தானது எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவருமான என்.எம். அமீன் பதிலளித்தார். D C















( Video இணைப்பு) ஐ.எஸ். அமைப்பு யார்..? நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு அசத்தல் தெளிவு படுத்தல். ( Video இணைப்பு) ஐ.எஸ். அமைப்பு யார்..?  நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு அசத்தல் தெளிவு படுத்தல். Reviewed by Madawala News on 7/21/2016 08:07:00 AM Rating: 5