Accaddemy

(Video) முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மாறியது வருந்தத்தக்க விடயம் .



அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கடமையேற்றுள்ள முரளிதரன், பல்லேகலையில் வைத்து  இலங்கை கிரிக்கெட் குழுவின் நிர்வாகியை அச்சுறுத்தியே விளையாட்டுத்துறைக்குள் உள்நுழைந்துள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

நேற்று  தலதா மாளிகையில் இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முரளியின் இந்த பந்து வீச்சு பயிற்சி நடவடிக்கையானது வருந்தத்தக்க விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முரளி முன்னாள் வீரர் மட்டுமல்ல உலகின் ஏனைய அணிகளுக்கு அவரது தொழில் நிபுணத்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்கான உரிமை அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் அதேவேளை இலங்கை மக்கள் முரளியிடம் இருந்து இதனை ( அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கடமையேற்றுள்ளதை) எதிர்பார்க்கவில்லை  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(Video) முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மாறியது வருந்தத்தக்க விடயம் . (Video) முரளிதரன்  அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மாறியது வருந்தத்தக்க விடயம் . Reviewed by Madawala News on 7/25/2016 10:45:00 AM Rating: 5