Ad Space Available here

சகோதரர் வபா பாரூக் அவர்களுக்கு ஒரு திறந்த மடல். w''அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டேன்,சட்டம் தன் கடமையை செய்யட்டும்   '' என்று மர்ஹும் அஷ்ரப் அன்றைய பாதுகாப்பு (பதில்) அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். 

குறிப்பு- இந்த கட்டுரை ஒரு குறித்த நபருக்கோ,கட்சிக்கோ ஆதரவாக எழுதப்படவில்லை,கிழக்கின் எழுச்சி இன் தலைவர் பற்றி நான் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் ,என்னுள் எழுந்த கேள்வியை கட்டுரையாய் வடித்துள்ளேன்,மேலும் இதில் உள்ள தகவல்கள் என் அறிவுக்கு உற்பட்ட முறையில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இத் தகவல்கள் தவறு என யாராவது ஆதாரத்துடன் கூறுவார்களாயின் பகிரங்க மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்''

முஸ்லிம் தலைமைகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற அவாவில் ,பலர் முயற்சி செய்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் ,கிழக்கின் எழுச்சி என்ற கோசம் அண்மையில் சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்கு வகித்து கொண்டிருக்கிறது. இது முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது  என்பது வெளிப்படை உண்மை.

இரண்டு வருடங்களுக்கு முன் இஸ்லாமிய கிலாபத் தலைவர் நான் என்று பக்தாதி அன்று தன்னை தானே அறிமுகம் செய்தால் போல்,இன்று கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் சகோதரர் வபா பாரூக் தன்னை தலைவர் என்று  அறிமுகம் செய்தி கொண்டார்.மேலும் இது தொடர்பான வாசக கவிதைகளையும் தான் முக புத்தகத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

''முஸ்லிம் தலைமை கிழக்குக்கு  வேண்டும்' என்ற வாசகத்தின் மூலம் முழுமையாக பிரதேச வாதத்தினை முதலீடு செய்ய முயற்சிப்பது போன்று எனக்குள் ஒரு எண்ணம் ( எனது எண்ணம் சரி என்று நான் இங்கு வாதிடவில்லை). அப்படியாயின் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள மதிப்புக்குரிய அமைச்சர் ரிசார்ட் அவர்களின் நிலைமை என்ன என்றும் என் மனதில் ஒரு சந்தேகம்.. இவற்றை எண்ணியவனாய் சகோதரர் வபா பாரூக் பற்றிய ஆய்வுக்குள் இறங்கினேன்.

Google தொடக்கம் அனைத்து வழிகளிலும்  தேடினேன், எவருக்கும் பெரிசாய் இவர் பற்றி தெரிந்து இருக்கவில்லை. சகோதரர் வபா பாரூக் அவரை பற்றி பெரிதாய் அறிமுகமும் கொடுக்கவும்  இல்லை. எனினும் ''உங்கள் தலைவனிடம் கேழுங்கள் அல்லது காங்கிரஸின் முதல் பக்கத்தை படித்துப்பாருங்கள் '' என்ற சகோதரர் வபா பாரூக்  இன் பதிவின் மூலம் நானும் முதல் பக்கம் நோக்கி பயணமானேன்.

எனக்கு கிடைத்த தகவல்

முஸ்லிம்  காங்கிரஸ் கொழும்பு 12 ,Dam street இல் தற்காலிக அலுவலகத்தில் இருந்த காலத்தில் ,இக் கட்சியின் முதல் பொருளாளர் என்ற பெருமை சகோதரர் வபா பாருக் இணையே சாரும். ஆரம்ப கால போராளி. மர்ஹும் அஷ்ரப் இன் பிரதேசத்தினை சேர்த்தவர் என்பதால் ,தலைவருடன் நெருங்கிய தொடர்பும் பேணப்பட்டது. சிறிது காலத்தின் பின்னர்  சில  காரணத்தினால் சகோதரர் வபா பாருக்  அவர்கள் சட்ட பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. (ஒரு சமூகத்தின் தலைவர் என்ற காரணத்தினால்,அந்த காரணம் இங்கு பதியப்படவில்லை)


இந்த நிலைமையில் சகோதரர் வபா பாருக்  குறித்து அப்போதைய பாதுகாப்பு (பதில்) அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அவர்கள் ,தலைவர் அஷ்ரப் இடம் கேள்வி எழுப்பினார். அதற்கு  தலைவர் அவர்கள் ''அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டேன்,சட்டம் தன் கடமையை செய்யட்டும்   '' என்று பதில் அளித்தார். அதன் பின்னர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் அவரை கட்சியை விட்டு நீக்கினார்.

அதனை தொடர்ந்து சட்டம் அதன் கடமையை செய்தது. சிறிது காலம் சிறைவாசம் அனுபவித்த சகோதரர் வபா பாரூக் அவர்கள் (சமூகத்துக்கு சேவை ஆற்றிய பலர், தான் சமூகத்துக்காய் சிறைவாசம் அனுபபித்தது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்) விடுதலை ஆகி,வெளிநாடு சென்று அவர் போக்கில் அழகிய முறையில் வாழ தொடங்கினார்.  இவர் அரசியல் இல் இருந்து ஒதுங்கி இரண்டு தசாப்தங்களுக்கு மேல் என்பது இங்கு குறிப்பிட்டு கூறப்பட வேண்டிய விடயமாகும்.


எனக்கு எழுந்த சந்தேகங்கள்.

1. மர்ஹும் அஷ்ரப் இன் கருத்தினை தொடர்ந்து ஒரு வேளை சகோதரர் வபா பாரூக் அவர்கள் தானாகவே விலகி இருக்க வேண்டும் அல்லது தலைவர் இவரை விளக்கி இருக்க வேண்டும்.


சரி இவர் தானாக விலகினார் என்று வைத்து கொள்வோம்.
முஸ்லிம்காங்கிரஸ் இன்  ஆரப்ப காலம் பெரிதும் முக்கியமானது. மர்ஹும் அஷ்ரப்  அவரகளுக்கு  பூரணமாக ஆதரவு தேவை பட்ட நேரம். நம் சமூகத்திக்காய் பலர் தன்னையே தியாகம் செய்த நேரம் .அந்த நேரத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்துக்காய் ,சமூக கடமையை விட்டு சகோதரர் வபா பாரூக்  விலகுவது எவ்வாறு நியாயம்??  அன்று சென்ற சமூக உணர்வு இன்று வந்த அதிசயம் என்ன??  இன்றைய நிலைமையை விட பாரதூரமான நிலைமையை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட போது,என் இந்த சமூக உணர்வு வரவில்லை??  ஹக்கீம் தவறு என்றால் குறைந்தது மதிப்புக்குரிய அதாவுல்லா அல்லது மதிப்புக்குரிய ரிசார்ட் அவர்களோடு இணைந்தாவது சமூகத்திக்கு கடமை ஆற்றி இருக்கலாமே??

சிறைவாசம் அனுபவித்த பலர் ,தொடர்ந்தும் சமுகத்திற்கு சேவை ஆற்றி உள்ளனர், என் அவ்வாறு நீங்கள் சேவை ஆற்றவில்லை??
மாயமாய் வந்த புதிய சமூக உணர்வுக்கான காரணம் என்ன?? அதுவும் கடந்தகாலங்களில் சேகு இஸ்ஸதீன் அவர்கள்,ரிசார்ட் அவர்கள்,அதாவுல்லா அவர்கள் போன்ற பலர் காங்கிரசை விட்டு ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட காலத்தில் வராத உணர்வு ஏன் ஹஸனலி அவர்கள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப் பட்ட காலத்தில் வந்தது??

அடுத்து தலைவர் உங்களை விலக்கியதாய் வைத்துக் கொள்வோம்.
உங்களுடைய கருத்துக்கள் ,முகப்புத்தக வாசகங்களின் படி நீங்கள் மர்ஹும் அஷ்ரப் அவர்களை தலைவராக மனமார ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பது வெளிப்படை உண்மை.

அப்படி உங்களாலும்,மக்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட தலைவரினால் அன்று நீக்கப்பட்ட உங்களை எவ்வாறு இன்று மக்கள் ஏற்றுக் கொள்வது?? அந்த தலைவரின் முடிவுகள்  இல் தவறு இருக்க வாய்ப்பு இல்லை ,அவர் அன்று சமூக நலனை கருத்தில் கொண்டு உங்களை விலக்கி இருக்கலாம்.
இன்று உள்ள முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் மர்ஹும் அஷ்ரப் இன்  இந்வார்த்தைகளை வேத வாக்காக மதிக்கின்றனர்.அவரின் வாக்கு படி நீங்கள் கட்சிக்கோ ,சமூகத்துக்கோ தேவை இல்லாதவர். அவ்வாறு இருக்கும் போது நீங்கள் எப்படி தலைவர் ஆக முடியும்??

2. முழுமையாக இஸ்லாமிய கோட்டபாடுகளை பின்பற்ற போவதாக கூறி வருகின்றீர்

அல்ஹம்துலில்லாஹ் நடந்தால் சந்தோசம், எனினும் உங்கள் செயற்பாடு அவ்வாறு அமையவில்லை என்பது கவலை.

உங்கள் இஸ்லாத்தில் எந்த இடத்தில் பிரிவினை பற்றி சொல்லி உள்ளது?? .நாளை வடக்கின் எழுச்சி ,தெற்கின் எழுச்சி என்று பல கூட்டங்கள்  கிளம்ப்பும். இவ்வாறு சமூகத்தில் பிரிவினையை உண்டாக்க எந்த இஸ்லாம் கூறி உள்ளது??

இந்த பிரிவினை எண்ணமே ஷியா என்ற கூட்டம் உருவாக காரணம்.
தயவு செய்து பிரிவினையை முதலீடு செய்து ,குளிர்காய முயற்சிக்காதீர்கள். இவ்வாறு உங்களை போன்றவர்களினால் தான் பல சேனாக்கள் எங்களை ஆட்டுகிறது.

வேண்டுகோள்- இஸ்லாம் பற்றி கூறும் நீங்கள் முகப் புத்தகத்தில் எவ்வாறு நாகரீமாக கருத்து சொலவது என்றும் சற்று கற்றுக் கொள்ளுங்கள்.(நாய் குலைப்பது போன்று, இவன் எல்லாம் ஒரு, என்ற உங்கள் comments)


3. கிழக்கின் எழுட்சித் தலைவன் என்று உங்களை அறிவித்துள்ளீர்.
எந்த ஒரு தேர்தல் மூலமாகவோ,மக்கள் சமூகத்தின் மூலமாகவோ தலைவர் என்ற அங்கீகாரம் தரப்படாமல் ,தனக்கு தானே தலைவன் என்று சொல்லும் அதிகாரம் யார் தந்தது?? அவ்வாறு எனில் நாளை நானும் தலைவன் என்று சொல்லலாமா??

எனவே மேலே எனக்குள்ள சந்தேகங்களுக்கு விடை தருவீர் என எதிர் பார்க்கிறேன்.

நன்றி.  M.Z.M ZAFNAS 
BSc.Eng(Hons).AMIE(SL)

''பிரிந்தது போதும்,ஒன்று படுவோம்''
சகோதரர் வபா பாரூக் அவர்களுக்கு ஒரு திறந்த மடல். w சகோதரர் வபா பாரூக் அவர்களுக்கு ஒரு திறந்த மடல். w Reviewed by Madawala News on 7/09/2016 02:33:00 PM Rating: 5