tg

சர்ச்சைகளை சும்மா ஊதித் தள்ளி விட்டு மீண்டு வருவார்.. ஆனால் அதுவல்ல விசயம்... z


-Zafar Ahmed -

கடைசியில் தேதி குறித்து விட்டார் டாக்டர் ஸாக்கிர் நாயக்..2006 செப்டம்பர் 16 வைத்துக் கொள்ளலாம்.இதுக்கு மேல் இதைப் பிற்போடுவதில் அர்த்தம் இல்லை."நான் ரெடி, அவர் ரெடியாமா?" பற்றிக் கொண்டது பர பரப்பு..யாரோட விவாதம் ? என்ன கேஸ் இது ? இந்த முறை விவாதம் புரிய போவது லேசுப்பட்ட ஆள் உடன் அல்ல..16 வது பாப்பரசர் போப் பெனடிக் உடன்..கிறிஸ்தவ மக்களை வழிகாட்டும் தலைவர் அவர்..அவருடன் விவாதமா? ஆதரவாகவும் எதிராகவும் சர்ச்சைகள் வெடித்து கிளம்பின.

பெரும் ஆவலுடன் முழு உலகுமே ஆவலுடன் எதிர்பார்த்த அந்த விவாதம், கடைசியில் வல்லாதிக்க நாடுகளின் அழுத்தத்தினாலும் பின் விளைவுகள் பற்றிய ஒரு வித எச்சரிக்கை காரணமாகவும் கைவிடப்பட்டது..

மிகப் பெரும் மத போதகர் ஸாக்கிர் நாயக்,மார்க்கத்தைக் கற்றுத் தேர்ந்தவர்..பல புகழ் பெற்ற சர்வதே பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்..1965 இல் மும்பாயில் பிறந்து டாக்டராகி இஸ்லாத்தையும் குர் ஆனையும் நன்கு கற்றுத் தேர்ந்து 1991 முதல் இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஆளுமை அவர்..

ஆசியாவின் அலங்கோலம் பங்களாதேசில் எவனோ ஒரு தீவிரவாதி ஸாக்கிர் நாயக்கின் பேச்சால் உந்தப்பட்டே தான் இப்படி வீணாய்ப் போனதாக திருவாய் மலர இந்தியா வில் சர்ச்சை வெடித்து இருக்கிறது..

உலகின் அனைத்து மத நூல்களிலும் உள்ள அத்தியாயங்கள், வரிகளை மள மள என ஒப்புவிக்கும் நடமாடும் டேட்டா பேஸ் இற்கு இந்தியாவில் வெடித்து கிளம்பியுள்ள சர்ச்சை ஒரு விசயமே இல்ல. சும்மா ஊதித் தள்ளி விட்டு மீண்டு வருவார்..அதுவல்ல விசயம்..

ஆனால் வாயால் வடை சுடும் நமது ஃபேஸ்புக் முப்திகள் சிலர் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இந்த அறிஞரை விமர்சிக்க தொடங்கி இருப்பதன் அர்த்தம் புரியவில்லை.மேல் நாடுகளில் மனித உரிமைக்காக நிர்வாண ஊர்வலம் போவது போல..சம்பந்தமே இல்லை..

2000 ஆம் ஆண்டில் வில்லியம் கேம்ப் உடன் பைபிளும் குர் ஆனும் தலைப்பில் அட்டகாசமாய் விவாதம் புரிந்து பலர் பாராட்டுக்களைப் பெற்றவரை 2006 ஜனவரியில் ரவி சங்கருடன் மிக நுட்பமாய் விவாதம் புரிந்து இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கம் என்று நிரூபித்த இவரை அரை வேகாடாம், விஞ்ஞானப் பித்தலாட்டமாம்..சர்க்கஸாம்...கோமாளியாம்..இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ்.

ஸாக்கிர் நாயக்கைப் பக்கம் பக்கமாய் விமர்சிக்கும் அளவுக்கு இவர்கள் சமூகத்தில் என்ன சாதித்து இருக்கிறார்கள் ? செய்த மறு மலர்ச்சி என்ன ? யாருக்காவது ஒரு பைசா பிரயோசனம் ? காலத்திற்கு காலம் யாராவது பிரபலத்திற்கு தார் ஊற்றுவது தானா வேலை ? பந்தியிலேயே இல்லாதவர்கள் சாப்பாட்டிற்கு உப்பில்லை என்று எவ்வாறு கூற முடியும் ?

இங்கே ஸ்கிரீன் சொட்டில் இருக்கும் இந்த மாற்று மத சகோதரர் இவர்களை விட எத்தனையோ மடங்கு மேலானவர் என்பதே என் அபிப்பிராயம்...
சர்ச்சைகளை சும்மா ஊதித் தள்ளி விட்டு மீண்டு வருவார்.. ஆனால் அதுவல்ல விசயம்... z சர்ச்சைகளை சும்மா ஊதித் தள்ளி விட்டு மீண்டு வருவார்.. ஆனால் அதுவல்ல விசயம்... z Reviewed by Madawala News on 7/09/2016 11:31:00 AM Rating: 5