Oceas

சப்ரகமு மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி. 1



சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினுடைய திருத்தப்பட்ட பரீட்சை நேரசூசிக்கு இணங்க மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு (தரம் 6 முதல் 9 வரை)இன்று முதல் இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் இன்று தரம் 8 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரலாறு பாடத்திற்குரிய வினாத்தாள்  உட்பட மற்றும் ஒருசில முக்கிய தரங்களுக்குரிய இரண்டாம் தவணை வினாத்தாள்களுக்கு பதிலாக 2016 முதலாம் தவணைக்குரிய வினாத்தாள்களே மாணவர்களுக்கு ஆசிரியர்களால் வழங்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினால் பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்தமாகி பிரபல தனியார் அச்சகங்கள் ஊடாக அச்சிடப்பட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களிலே இப்படியான தொடர்ச்சியான  தவறுகள்  இடம்பெற்றுக் கொண்டிருக்கின.

இரண்டாம் தவணைப் பரீட்சையை முன்னிட்டு ஆயத்தமாகி வந்த அனைத்து முஸ்லிம் மாணவர்களும் இன்று  கல்வித் திணைக்களத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

இதேபோல் மேற்படி மகாண கல்வித் திணைக்களத்தினால் இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பல வினாத்தாள்கள் ஏற்கெனவே தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களாகவே காணப்படுகின்றன .இது தொடர்பில் நேற்றைய தினத்தில் பல முஸ்லிம் சமூக இணையதளங்களிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

சப்ரகமு மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மேற்படி சமூக அநீதிகள் தொடபாக முஸ்லிம் சமூகத் தலைமைகள் உரிய கவனம் செலுத்துவார்களா என பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்கள்  மற்ற  பாட ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எம்.எல்.எஸ்.முஹம்மத்  - இரத்தினபுரி
சப்ரகமு மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி. 1 சப்ரகமு மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி. 1 Reviewed by Madawala News on 8/02/2016 01:52:00 PM Rating: 5