Oceas

வடகொரியா ஏவிய ஏவுகணை 1,000 கிலோ­மீற்றர் சென்று ஜப்பானுக்கு அருகில் கடலில் விழுந்ததால் பரபரப்பு.



வட கொரி­யாவால் ஏவிப் பரி­சோ­திக்­கப்­பட்ட போரா­யு­தங்­களை ஏந்திச் செல்லும் வல்­ல­மையைக் கொண்ட ஏவு­க­ணை­யொன்று 1,000 கிலோ­மீற்றர் தூரம் பய­ணித்து ஜப்­பா­னிய கடலில் (ஜப்பானுக்கு 250 கிலோமீட்டர் தொலைவில்) விழுந்­துள்­ள­தாக தென் கொரியா மற்றும் ஜப்­பா­னிய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

இத­னை­ய­டுத்து பிராந்­தி­யத்தில் பதற்­ற­நிலை தோன்­றி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

மேற்­படி ஏவு­க­ணை­யா­னது வட கொரி­யாவின் கிழக்கு கடற்­க­ரை­யி­லி­ருந்து நேற்று புதன்­கி­ழமை ஏவப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் தீர்­மா­ன­மொன்று வட­கொ­ரி­யா­வுக்கு அணு ஆயுத மற்றும் போரா­யுத ஏவு­கணைத் தொழில்­நுட்­பத்தை விருத்திசெய்­வ­தற்கு தடைவிதிக்­கி­றது.

இந்­நி­லையில், தென் கொரி­யாவில் ஏவு­கணை எதிர்ப்பு முறை­மை­யொன்றை ஸ்தாபிக்கும் அமெ­ரிக்­காவின் திட்டத்திற்கு பௌதிக ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என வட கொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியா ஏவிய ஏவுகணை 1,000 கிலோ­மீற்றர் சென்று ஜப்பானுக்கு அருகில் கடலில் விழுந்ததால் பரபரப்பு. வடகொரியா ஏவிய ஏவுகணை  1,000 கிலோ­மீற்றர் சென்று ஜப்பானுக்கு அருகில் கடலில் விழுந்ததால் பரபரப்பு. Reviewed by Madawala News on 8/04/2016 10:20:00 AM Rating: 5