Oceas

( வீடியோ இணைப்பு) ஒலிம்பிக்கில் 100 கிலோ 'ஸ்பைடர்கேம்' திடீரென விழுந்தது. பலர் காயம்.



ரியோ ஒலிம்பிக் பூங்காவில், கம்பிவடங்கள் அறுந்ததால் பெரிய கேமரா ஒன்று விழுந்தது. இதில்  7 பேர் காயமடைந்துள்ளனர். உயரத்தில் இருந்து காட்சிகளை எடுக்கக்கூடிய 'ஸ்பைடர்கேம்' எனப்படும் அந்த கேமரா, நேற்று கூடைப்பந்து அரங்கத்தின் வெளியே 20 மீட்டர் உயரத்திலிருந்து திடீரென விழுந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்

கேமராவின் எடையைக் கம்பிவடங்களால் இனி தாங்க இயலாது என்பதை அறிந்த்  ஒலிம்பிக் ஒளிபரப்பு சேவை குழு  கேமராவைத் தாங்கி பிடித்த கம்பிவடத்தை வலுப்படுத்தும் முயற்சிலும், அந்தப் பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்ததாக அந்தக் குழு கூறியது.

காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து உலுக்கும் இந்த சம்பவமும் ஒன்று.
( வீடியோ இணைப்பு) ஒலிம்பிக்கில் 100 கிலோ 'ஸ்பைடர்கேம்' திடீரென விழுந்தது. பலர் காயம். ( வீடியோ இணைப்பு) ஒலிம்பிக்கில் 100 கிலோ  'ஸ்பைடர்கேம்'  திடீரென விழுந்தது. பலர் காயம். Reviewed by Madawala News on 8/16/2016 04:13:00 PM Rating: 5