Free Space

ரங்கன ஹேரத்தின் ஹேட்ரிக்குடன் 106 க்கு சுருண்டது அவுஸ்திரேலியா... வெல்டன் லயன்ஸ்.



அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்  அனைத்து விக்கட்டுக்களையும்  இழந்து 106 ஓட்டங்களை மட்டுமே  பெற்றுக் கொண்டது.

இரண்டாம் நாளான இன்றைய போட்டியின் போதே ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்றது.

சற்றுமுன்னர் இலங்கை அணி தனது இரண்டாம் துடுப்பாட்ட இன்னிங்க்சை ஆரம்பித்துள்ளது . SL 5 / 0
ரங்கன ஹேரத்தின் ஹேட்ரிக்குடன் 106 க்கு சுருண்டது அவுஸ்திரேலியா... வெல்டன் லயன்ஸ். ரங்கன  ஹேரத்தின் ஹேட்ரிக்குடன் 106 க்கு சுருண்டது அவுஸ்திரேலியா... வெல்டன் லயன்ஸ். Reviewed by Madawala News on 8/05/2016 11:08:00 AM Rating: 5