Free Space

நல்லாட்சி நகைச்சுவை ! ஒரே கட்டிடதொகுதிக்கு 10 நிமிட இடைவெளியில் இரண்டு திறப்புவிழா !!


40 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹிங்குரான சந்தை கட்டிடதொகுதியை இன்று காலை கிழக்கு முதலமைச்சர் திறந்து வைக்கவிருந்த நிலையில் அவர் அங்கு வருவதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னர் அமைச்சர் தயா கமகே மற்றும் அவரது பரியார் பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோர் பலவந்தமாக திறந்துவைத்துள்ளனர்.

அதன் பின்னர் அங்கு வருகை தந்த முதலமைச்சரும் குறித்த கட்டிட தொகுதியினை திறந்துவைத்துள்ளார்.

அமைச்சர் தயா கமகேயின் ஆதரவாளர்கள் கல்வெட்டு திரைசீலையையும் எடுத்து சென்றுவிட்டதால் கல்வெட்டுக்கு மேலே ஒட்டியிருந்த காகிதத்தை நீக்கி கிழக்கு முதல்வர் குறித்த கட்டிட தொகுதியை திறந்துவைத்துள்ளார்.
நல்லாட்சி நகைச்சுவை ! ஒரே கட்டிடதொகுதிக்கு 10 நிமிட இடைவெளியில் இரண்டு திறப்புவிழா !! நல்லாட்சி நகைச்சுவை ! ஒரே கட்டிடதொகுதிக்கு 10 நிமிட இடைவெளியில் இரண்டு திறப்புவிழா !! Reviewed by Madawala News on 8/27/2016 10:06:00 PM Rating: 5