Oceas

ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் பொய்கள் சொல்லி உலக சாதனை.

பொய் பேசுவது பெரும் பாவம் ஆகும்
பொய்யை பரப்புவது அதனைவிட பெரிய பாவம்.
.

இன்று பலர் வட்ஸ்ஆப்பில் வரும் விடயங்களை ஆராயாமல்
இது உண்மையாக இருக்குமா?
பொய்யாக இருக்குமா? என்று
ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல்
தமக்கு தெரிந்த பல ஆயிரம் பேருக்கு தகவல்களை
பகிர்ந்து கொள்கிறார்கள்.
.

நீங்கள் பகிரும் விடயம் பொய்யானதாக இருக்குமிடத்து
நீங்கள் பகிர்ந்த ஒரு விடயம் 10 ஆயிரம் பேருக்கு
சென்றால்  நீங்கள் சில நிமிடங்களில்
10 ஆயிரம் பொய் சொன்னதற்கான பாவத்தை சம்பாதித்துக் கொள்வீர்கள்
.

அல்லாஹ்வின் புனித குர்ஆனில் வரும்
பின்வரும் வசனத்துக்கு
10 ஆயிரம் முறை மாற்றம் செய்தவறாக
10 ஆயிரம்முறை அல்லாஹ்வுக்கு
அல்குர்ஆனுக்கு
மாற்றம் செய்தவராக ஆகிவிடுவீர்கள்.

.
குறிப்பாக சில விடயங்களை பகிர்ந்தால்வட்ஸ்ஆப் நிறுவனம் 1 ரூபாய் தருவார்கள் என்று வரும்
அனைத்து தகவல்களும் பொய்யானதே.
.

வட்ஸ்ஆப் நிறுவனம் அப்படி யாருக்கும் பணம் வழங்குவதில்லை.
.
இதனை வாசித்ததன் பின்னராவது
விடயங்களை பகிரும் போது உறுதிப்படுத்திக்கொண்டு பகிருங்கள்
அல்லது பகிராமல் விட்டுவிடுங்கள்.
வீணாக எமது நன்மைகளை வீணாக்கிக்கொள்ளாமல் இருப்போம்.
49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

ARM INAS

ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் பொய்கள் சொல்லி உலக சாதனை. ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் பொய்கள் சொல்லி உலக சாதனை. Reviewed by Madawala News on 8/07/2016 04:29:00 PM Rating: 5