Free Space

கண்டியில் 10 மாணவிகள் மீது துஸ்பிரயோகத்தில் ஒருவர் சிக்கினார்.



கண்டியில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இயங்கிவந்த தனியார் வதிவிடப் பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றிய மாணவிகள் பலரை, வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், கைகதான வரியபொலவைச் சேர்ந்த சந்திமல் கமகே (வயது 35) என்பவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கண்டி நீதவான் நீதிமன்ற நீதுவான் புத்திக சி.ராகல உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக மேற்படி பிரதேசத்தில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்நிறுவனம் இயங்கி வருவதாகவும் இதுவரை பலர் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இம்முறை நடத்தப்பட்ட பயிற்சியில் 17 மாணவிகள் பங்கேற்றுள்ளதுடன் இவர்களில் 10 பேர் இந்நிலையத்திலிருந்து தப்பி வந்துள்ளதாகவும் இவர்களே இவ்விபரத்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இந்நிலையத்தில் செவ்வாய்கிழமை (02)  பயிற்சியை பெற்றுக்கொண்டிருந்த மாணவிகளில்  10 பேர், அங்கிருந்த கடும் பாதுகாப்பு ஒழுங்குகளையும் மீறி தப்பிச் சென்று காட்டுப் பகுதியில் மறைந்துள்ளனர்.

காட்டு வழியாக வந்த பிரதேசவாசி ஒருவரைச் சந்தித்த இவர்கள், விபரங்களை கூறியுள்ளதுடன் அவரது உதவியுடன் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி இச்சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

கண்டி பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பராமரிப்புப்  பிரிவினர், உடன் ஸ்தலத்துக்கு விரைந்து மாணவிகளை பொறுப்பேற்றதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது .
கண்டியில் 10 மாணவிகள் மீது துஸ்பிரயோகத்தில் ஒருவர் சிக்கினார். கண்டியில் 10 மாணவிகள் மீது துஸ்பிரயோகத்தில் ஒருவர் சிக்கினார். Reviewed by Madawala News on 8/07/2016 10:31:00 PM Rating: 5