Accaddemy

நிறைவடைந்தது பெண்களுக்கான ஒலிம்பிக் மரதன்.. இலங்கைக்கு 129வது இடம். பஹ்ரைனுக்கு வெள்ளி பதக்கம்.



- Razana Manaf-

ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மரதன் ஓட்டம் தற்பொழுது நிறைவு பெற்றிருக்கின்றது.. 157 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த மரதன் போட்டியில் போட்டி நிறைவு பெறுவதற்கு முதலே 24 போட்டியாளர்கள் இடை நடுவில் விலகி கொண்டார்கள்.

133 போட்டியாளர்களே போட்டியை முழுவதுமாக நிறைவு செய்தவர்கள் இலங்கை சார்பாக நிலூகா கீதானி ராஜசேகர பங்கு பற்றியிருந்தார் ஆனாலும் அவரால் 129வது இடத்தையே பெற முடிந்திருக்கிறது..

போட்டியிலிருந்து இடை விலகாமல் 3 மணித்தியாலம் 11 நிமிடம் 5 செக்கன்கள் ஓடி போட்டியை அவர் முழுவதுமாக நிறைவு செய்ததற்காக வேண்டி சரி அவருக்கு நம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும்..

வழமை போன்று கென்யாவே தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருக்கின்றது..

ரியோ ஒலிம்பிக்கில் தனது முதலாவது வெள்ளி பதக்கத்தை இந்த மரதன் வழியாக பெற்ற பஹ்ரைன் தனது ஒலிம்பிக் பதக்க கனவை நிறைவேற்றியுள்ளது.. பஹ்ரைனின் இந்த கனவை நிறைவேற்றி வைத்திருப்பவர் கென்யாவில் பிறந்து பஹ்ரைனின் குடியுரிமை பெற்று பஹ்ரைனுக்காக போட்டியிட்ட ''எயூனிஸ் கிர்வா'' ஒலிம்பிக் வரலாற்றில் இது பஹ்ரைனுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம்.

மூன்றாவது இடம் சென்று சேர்ந்திருப்பது எதியோப்பியாவிற்கு..
இந்த ஒலிம்பிக் தொடரில் இலங்கைக்கு இன்னும் ஒரேயொரு போட்டி எஞ்சியிருக்கிறது அது நிலூக்க கருணாரத்ன பங்கு கொள்ளும் ஆண்களுக்கான பெட்மிண்டன் போட்டி இன்றிரவு நடைபெற இருக்கிறது..

நிறைவடைந்தது பெண்களுக்கான ஒலிம்பிக் மரதன்.. இலங்கைக்கு 129வது இடம். பஹ்ரைனுக்கு வெள்ளி பதக்கம். நிறைவடைந்தது பெண்களுக்கான ஒலிம்பிக் மரதன்.. இலங்கைக்கு 129வது இடம். பஹ்ரைனுக்கு வெள்ளி பதக்கம். Reviewed by Madawala News on 8/14/2016 09:48:00 PM Rating: 5