17 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தில்ஷான் இலங்கையணிக்காக செய்தது என்ன?



-Razana Manaf-

17 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தில்ஷான் இலங்கையணிக்காக பெற்றுக்கொடுத்த வெற்றிகள் அதிகம், கௌரவங்கள் அதிகம், அவற்றை எல்லாம் ஒரு நொடியில் மறந்துவிட்டு தில்ஷானை மிகவும் மலினமான முறையில் கலாய்ப்பது முறையற்ற ஒரு செயல் அன்றி வேறில்லை, சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறும் இந்த தருணத்தில் இத்தனை வருடங்களாக அவர் இலங்கையணிக்காக ஒரு சாதாரண வீரராகவும், தலைவராகவும், விளையாடியமைக்காக நமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் 1500 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர்..,

உலக கிண்ண போட்டியொன்றில் அதிக தனி நபர் ஓட்டங்களை பெற்ற முதல் வீரர்..,

சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றிருக்கும் முதல் இலங்கை வீரர் உலகளவில் இரண்டாவது..,

இருபதுக்கு இருபது போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர்..,

இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக பிடிகளை எடுத்த முதல் இலங்கை வீரர்..,
இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக நான்கு ஓட்டங்களை பெற்றிருக்கும் முதல் வீரர் மொத்தமாக 217 நான்கு ஓட்டங்கள்,

35 வயதிற்கு பிறகு அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் ஒரு வீரர் எனில் அது தில்ஷான்தான் 4391 ஓட்டங்களை தனது 35வயதிற்கு பிறகு பெற்றுள்ளார்.
வெளிநாட்டில் இடம்பெற்ற ஒருநாள் தொடரொன்றில் அதிக ஓட்டங்களை பெற்றிருக்கும் முதல் சப் கண்டினன்டல் வீரர் தில்ஷான்..
ஆறு ஓட்டங்கள் எதுவும் பெறாமல் தனி நபர் ஒருவர் பெற்ற அதிக பட்ச ஓட்டங்களுக்கு சொந்தக்காரரும் இவர்தான்..,

ஒரு நாள் போட்டிகளில் 150 ஓட்டங்களுக்கு அதிகம் பெற்ற இரண்டாவது வீரர் தில்ஷான் மூன்று தடவைகள் 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருக்கிறார்.. முதலிடத்தில் இருப்பவர் சனத் 4 தடவைகள்..,

லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக பட்ச தனி நபர் ஓட்டங்களை பெற்றிருக்கும் முதல் இலங்கை வீரர்..,

தென்னாபிரிக்க அணிக்கெதிராக முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றுக்கொடுத்த இலங்கையணி தலைவர்..

இலங்கையணிக்காக இவ்வளவு தனி நபர் சாதனைகளையும் படைத்திருக்கும் தில்ஷான் அணியின் சக வீரர்களுடன் இணைந்தும் கூட பல துடுப்பாட்ட சாதனைகளை படைத்திருக்கிறார் என்பது மேலதிக தகவல்.., வயதானால் எல்லா வீரர்களுமே தளர்வடைந்து சோர்வடைந்து விடுவார்கள் அதற்கு தில்ஷான் ஒன்றும் விதிவிலக்கல்ல இத்தனை வருட காலமும் இலங்கையணியின் வெற்றிகளுக்காக தன்னை அர்ப்பணித்து விளையாடிய இந்த வீரன் இலங்கை கிரிக்கெட் உள்ளவரைக்கும் போற்றப்பட வேண்டிய அல்லது நினைவு கூறப்பட வேண்டிய வீரரே அன்றி கேலி பண்ணக்கூடிய அளவிற்கு அவர் விளையாடி விட்டு செல்லவில்லை..

கிரிக்கெட்டில் இனி டில்லிஸ்கூப்பை பார்க்க முடியாது என்பதே கொஞ்சம் கஷ்டமான விடயம்..

தில்ஷானை நாமும் வாழ்த்தி விடை கொடுக்கின்றோம்..

-Razana Manaf-
17 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தில்ஷான் இலங்கையணிக்காக செய்தது என்ன? 17 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தில்ஷான் இலங்கையணிக்காக செய்தது என்ன? Reviewed by Madawala News on 8/25/2016 07:59:00 PM Rating: 5