Free Space

மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன். #Srilanka



பாதுக்க - மலகல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விபத்து இடம்பெற்ற போது குறித்த இளைஞர் பாதுகாப்பு தலைகவசம் அணிந்திருக்கவில்லை என விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.

அதி வேகத்தின் காரணமாகவும் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன். #Srilanka மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன். #Srilanka Reviewed by Madawala News on 8/16/2016 02:17:00 PM Rating: 5