Oceas

கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்த்த பஸ். பயணிகள் பலர் காயம். ஒருவர் பலி. 1



மன்னார், மடு பிரதேசத்திலிருந்து முழங்காவில் ஊடாக, யாழ்ப்பாணம் சென்ற பஸ் ஒன்று, திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 17பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மடத்தடியைச் சேர்ந்த புகனேந்திரன் அன்னரத்தினம் (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவார்.

பூநகரி, மண்டைக்கள்ளாறு, நாளாவெளி பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி பஸ், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மடு திருத்தலத்தலத்துக்கு யாத்திரை சென்று திரும்பியவர்களே, விபத்தில் சிக்கியுள்ளனர்.

 காயமடைந்தவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்த்த பஸ். பயணிகள் பலர் காயம். ஒருவர் பலி. 1 கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்த்த பஸ். பயணிகள் பலர் காயம். ஒருவர் பலி.  1 Reviewed by Madawala News on 8/22/2016 07:34:00 PM Rating: 5