மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் ( 20 வயது) உயிரிழப்பு.



மாவனெல்லை பெலிகம்மன பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் இருவர் பலியாகியுள்ளனர்.

கண்டி நோக்கிப் பயணித்த  மோட்டார் வாகனம், முன்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர்.

உடுமுல்ல, மானெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

விபத்தையடுத்து, தப்பிச்சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதியை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் ( 20 வயது) உயிரிழப்பு. மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் ( 20 வயது) உயிரிழப்பு. Reviewed by Madawala News on 8/11/2016 01:23:00 PM Rating: 5