Free Space

சற்றுமுன் முடிவுக்கு வந்த தனஞ்ஞய டி சில்வாவின் மெரதன் இனிங்க்ஸ்: சந்திமால் தனஞ்ஞய 200 ரன் இணைப்பாட்டம் ..


அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி தற்போது 237 ஓட்டங்களை 6 விக்கட் இழப்புக்கு பெற்றுள்ளது.

நேற்றைய நாள் இறுதி வரை துடுப்பெடுத்தாடிய தனஞ்ஜய டி சில்வா 116 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 64 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த அதேவேளை தனஞ்ஞய சில்வா 129 ஓட்டங்களுக்கு சற்றுமுன் ஆட்டமிழந்தார்.

இவர்கள் இருவம் பெற்ற இணைப்பு ஆட்ட ஓட்டங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது .இது இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியொன்றில் 6 ஆவது விக்கெட் இணைப்பு ஆட்டமாக பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக கொள்ளப்படுகின்றது.

அதுமாத்திரம் அன்றி அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பெறப்பட்ட இரண்டாவது 200 ரன் இணைப்பாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் அஞ்ஜலோ மெத்திவ்ஸ் ஆகியோர் இணைந்து 6 ஆவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இது நேற்று வரை 6 ஆவது விக்கெட்டுக்காக இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்றுக் கொண்ட அதிகூடடிய ஆட்டமாக கொள்ளப்பட்டது.

1992 வருடம் அர்ஜுன ரனதுங்க மற்றும் குருசிங்க ஆகியோர் இணைந்துபெற்றுக்கொண்ட 232  ஓட்டங்கள் இலங்கை அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பெற்ற அதிகூடிய இணைப்பாட்டம் ஆகும்.


சற்றுமுன் முடிவுக்கு வந்த தனஞ்ஞய டி சில்வாவின் மெரதன் இனிங்க்ஸ்: சந்திமால் தனஞ்ஞய 200 ரன் இணைப்பாட்டம் .. சற்றுமுன் முடிவுக்கு வந்த தனஞ்ஞய டி சில்வாவின் மெரதன் இனிங்க்ஸ்: சந்திமால் தனஞ்ஞய 200 ரன் இணைப்பாட்டம் .. Reviewed by Madawala News on 8/14/2016 10:10:00 AM Rating: 5