2016 ம் ஆண்டின் தேசிய மீழாத் விழாவை பதுளை மாவட்டத்தை பிரதானமாக கொண்டு நடாத்த திட்டம் ...


-J M Hafeez-
2016 ம் ஆண்டின் தேசிய மீழாத்  விழாவை பதுளை மாவட்டத்தை  பிரதானமாக கொண்டு நடாத்தப்பட உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமர விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
இவ்வருட தேசிய மீழாத் விழா தொடர்வில் கலந்துரையாடும் நிகழ்வின் போதே அமைசச்ர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹலீம், கடந்த அரசு கலாத்தில் தேசிய மீழாத் விழாவிற்கு உறிய கௌரவம் வழங்கப்பட வில்லை என்றும் பதுளை நுவரெலியா போன்ற மாவட்டங்கள் புறக்கனிக்கப் பட்டதாகவும் தெரிவித்தார்.
இவ்வருட தேசிய மீழாத் விழாவின் போது பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள  பள்ளி வாசல்கள் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இவ்வருட தேசிய மீழாத் விழாவானது இனங்களுக்கு இடையில் நல்லினக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அரசு இதற்கு உரிய கௌரவத்தை வழங்கும் முகமாக அமைச்சரவை அனுமதியையும் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் ஹலீம் இங்கு தெரிவித்தார்.
 
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளி வாசல்களை புனர் நிர்மாணம் செய்வதற்கான நிதி உதவிகளும் இங்கு வழங்கப்பட்டன.

இக் கலந்துறையாடலில் தொழில் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர் ஜயந்த கன்னங்கரா, முன்னாள் அமைச்சர் வின்சன்ட் டயஸ், முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச். சமீல் ஆகியோரும் பலந்து கொண்டனர்.

2016 ம் ஆண்டின் தேசிய மீழாத் விழாவை பதுளை மாவட்டத்தை பிரதானமாக கொண்டு நடாத்த திட்டம் ... 2016 ம் ஆண்டின் தேசிய மீழாத்  விழாவை பதுளை மாவட்டத்தை  பிரதானமாக கொண்டு நடாத்த திட்டம் ... Reviewed by Madawala News on 8/10/2016 11:23:00 PM Rating: 5