காஷ்மீரில் இன்று ஜும்மாதொழுகையின் பின்னர் வன்முறை வெடித்தது ! 3 பலி 150 காயம்...


காஷ்மீரில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில்  150 பேர் காயமடைந்தனர். 
 
காஷ்மீரில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விரிவிக்கப்பட்டது. 

மாநிலத்தில் இயல்பு நிலையானது தொடர்ச்சியாக 28-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஜுலை 8-ம் தேதி புர்கான் வானி கொல்லப்பட்டதில் இருந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 53 பேர் பலியாகியுள்ளனர். 

இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை கெஷ்மீரில் அடுத்து பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர். நவ்காம் பகுதியில் தொழுகை முடிந்ததும் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் எடுத்த எதிர் நடவடிக்கையில் முகமது முக்பால் காண்டே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முகமது முக்பால் உயிரிழந்த சம்பவம் பரவியதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. . 

மேலும் பத்காம் மாவட்டம் கான்சாகிப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் எடுத்த எதிர்நடவடிக்கையில் மூன்று பேர் காயமடைந்தனர். 

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட வழியிலே உயிரிழந்துள்ள நிலையில் பிற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

வாலிபர் இறந்த விவகாரம் மருத்துவமனை அருகே போராட்டத்திற்கு வழிவகை செய்தது. அப்போதும் பாதுகாப்பு படையினர், போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சோபூரில் நடைபெற்ற மோதலிலும் வலிபர் ஒருவர் உயிரிந்தாக  போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய வன்முறையாளர்கள் காவல் நிலையம் மற்றும் பாதுகாவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஸ்ரீநகரில் மாநில சுகாதாரத் துறை மந்திரி ஆசியா நாகாஸ் வீட்டில் கற்கள் வீசப்பட்டது. வீட்டில் ஆள் இல்லாத காரணத்தினால் யாரும் காயமடையவில்லை.  

மோதல் சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். 
காஷ்மீரில் இன்று ஜும்மாதொழுகையின் பின்னர் வன்முறை வெடித்தது ! 3 பலி 150 காயம்... காஷ்மீரில் இன்று ஜும்மாதொழுகையின் பின்னர் வன்முறை வெடித்தது ! 3 பலி 150 காயம்... Reviewed by Madawala News on 8/05/2016 09:44:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.