Accaddemy

சவூதி அரே­பியா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 சிறு­வர்கள் பலி.



யேம­னி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் சிக்கி சவூதி அரே­பி­யாவில் 3 சிறு­வர்கள் பலி­யா­ன­துடன் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக சவூதி அதி­கா­ரிகள் நேற்று திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தனர்.

சவூ­தியின் எல்லைப் பிராந்­திய நகர்­க­ளி­லொன்­றான நஜ்­ரனில் இடம்­பெற்ற ஏவு­கணைத் தாக்­கு­தலில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு சிறு­மிகள் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அதே குடும்­பத்தைச் சேர்ந்த ஐவர் காய­ம­டைந்­துள்­ளனர்.

 அதே­ச­மயம் அதே பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற ஷெல் தாக்­கு­தலில் 11 வயது சிறுவன் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அவ­னது தாயார் காய­ம­டைந்­துள்ளார்.

மேலும் ஜஸான் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற மூன்­றா­வது தாக்­கு­தலில் சவூ­தியைச் சேர்ந்த குழந்­தை­யொன்றும் எதி­யோப்­பிய பெண்­ணொ­ருவர் உட்­பட இரு பெண்­களும் காய­ம­டைந்­துள்­ளனர். மேற்­படி 3 தாக்­கு­தல்­களும் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்தக்­கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் யேம­னி­லுள்ள ஷியா கிளர்ச்­சி­யா­ளர்கள் மற்றும் அவர்­க­ளது நட்புக் குழுக்­க­ளுக்கும் யேம­னிய அர­சாங்­கத்­துக்­கு­மி­டையில் ஐக்­கிய நாடுகள் மத்­தி­யஸ்­தத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட சமா­தானப் பேச்சுவார்த்தைகள் இந்த மாத ஆரம்பத்தில் இரத்தானதையடுத்து யேமனிலிருந்து எல்லை யைக் கடந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

சவூதி அரே­பியா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 சிறு­வர்கள் பலி. சவூதி அரே­பியா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 சிறு­வர்கள் பலி. Reviewed by Madawala News on 8/30/2016 09:51:00 AM Rating: 5