Free Space

திரு­ம­ண­மான இளம் பெண் மீது 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம். அர­நா­யக்கவில் சம்பவம்.



மர­ண­ம­டைந்த இரா­ணுவ வீரர் ஒரு­வரின் மனை­விக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுத்து பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்­த­தா­கக்­ கூ­றப்­படும். மூன்று இளை­ஞர்­களை அர­நா­யக்க பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

அர­நா­யக்க கும­ர­புர கிர­மத்தைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயா­ரான இளம்பெண் ஒருவர் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்தே பொலிஸார் மூன்று இளை­ஞர்­களை கைது­செய்­துள்­ளனர்.


பாதிக்­கப்­பட்ட இரண்டு பிள்­ளை­களின் தாய் பொலிஸ் நிலை­யத்தில் செய்­துள்ள முறைப்­பாட்டில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது.

இரா­ணுவ வீர­ரான எனது கணவர் மர­ண­ம­டைந்த பின்னர் அர­நா­யக்க–கும­ர­புர பிர­தே­சத்தில் வீடொன்றில் இரு பிள்­ளை­க­ளுடன் தனி­மையில் வாழ்ந்து வரு­கின்றேன்.

இவ்­வா­றான நிலையில் இம்­மாதம் 05ஆம் திகதி இரவு வீட்­டுக்குள் திடீ­ரென பிர­வே­சித்த நான்கு இளை­ஞர்கள் தன்­னையும் இரு பிள்­ளை­க­ளையும் கொலை செய்­வ­தாக அச்­சு­றுத்தி பாலியல் குற்றம் புரிந்­தனர்.

அதன் பின்னர் கடந்த 19ஆம் திகதி இரவு நான்கு இளை­ஞர்­களில் மூன்று இளை­ஞர்கள் வீட்டின் கத­வு­களை தட்டி கொலை மிரட்டல் விடுத்து அச்­சு­றுத்தி கதவை திறக்­கு­மாறு கோரி­யுள்­ளனர்.

இதனால் அச்சம் கொண்ட மர­ண­ம­டைந்த இரா­ணுவ வீரரின் மனைவி கூக்­கு­ர­லிட்டு அய­ல­வர்­களின் உத­வியை நாடி­யுள்ளார்.

இப்­பெண்ணின் அப­யக்­கு­ரலைக் கேட்ட அய­ல­வர்­களும் பக்­கத்­து­வீட்டில் வசிக்கும் மாமி, மாமனார் ஆகியோர் அங்கு விரைந்து வந்­துள்­ளனர்.

இதனால் இளை­ஞர்கள் மூவரும் பதற்­ற­ம­டைந்த நிலையில் தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

இதன் பின்னர் பொலி­ஸா­ரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
திரு­ம­ண­மான இளம் பெண் மீது 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம். அர­நா­யக்கவில் சம்பவம். திரு­ம­ண­மான இளம் பெண் மீது 3  இளைஞர்கள் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம். அர­நா­யக்கவில் சம்பவம். Reviewed by Madawala News on 8/31/2016 11:04:00 AM Rating: 5