Accaddemy

சுதந்­திரக் கட்­சி­யில் இருந்து 40 உறுப்­பி­னர்­களை நீக்­குவது ஒரு மிகச்சிறந்த முடிவு.



நாட்­டையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யை யும் குழப்பும் நபர்­க­ளுக்கு இனியும் மன்­னிப் புக் கிடை­யாது. முக்கிய உறுப்­பி­னர்­களை கட்­சி­யி­லி­ருந்து நீக்கும் செயற்­பாட்­டினை முன்­னரே எடுத்­தி­ருக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க தெரி­வித்தார்.

 ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து 40 உறுப்­பி­னர்­களை நீக்­கு­வ­தாக கட்­சியின் தலை­மைத்­துவம் நேற்று அதி­ரடி தீர்­மனம் எடுத்­தி­ருந்த நிலையில் இது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

கட்­சிக்­கென்று ஒரு கொள்­கையும் ஒழுக்க­கோ­வையும் உள்­ளது. எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஒழுக்­கத்தை மீறும் வகையில் கட்சி செயற்­ப­டக்­கூ­டாது.

தற்­பொ­ழுது கட்­சி­யி­லி­ருந்து 40 பேரை நீக்­கி­யுள்­ளமை தொடர்­பில் கட்சி மிக சரி­யான நட­வ­டிக்­கை­யினை எடுத்­துள்­ளது என்றே நான் நம்­பு­கின்­றேன.

எனினும் இதுவும் கால­தா­ம­த­மான செயற்­பா­டாகும். நாட்­டையும் கட்­சி­யையும் குழப்­பி­வரும் இவர்­களை ஆரம்­பித்­தி­லேயே கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யி­ருக்க வேண்டும். எனினும் நீண்­ட­கா­ல­மாக இவர்­க­ளது செயற்­பா­டு­க­ளுக்கு கட்­சியின் தலை­மைத்­துவம் மன்­னிப்பு கொடுத்து வந்­தது. காலக்­கேடும் கொடுத்­தது. இனியும் இவர்­க­ளுக்கு மன்­னிப்பு கொடுக்க முடி­யாது.

அத்­துடன் இப்­போது எடுத்­துள்ள தீர்­மானம் சரி­யா­னது என்றே நம்­பு­கின்றேன். கட்­சி­யையும் நாட்­டையும் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்ல வேண்­டு­மாயின் இவ்­வா­றான இறுக்­க­மான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும்.

அதேபோல் நாட்­டையும் அரசாங்கத்தின் ஜனநாய செயற்பாடுகளையும் குழப்பும் நபர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
சுதந்­திரக் கட்­சி­யில் இருந்து 40 உறுப்­பி­னர்­களை நீக்­குவது ஒரு மிகச்சிறந்த முடிவு. சுதந்­திரக் கட்­சி­யில் இருந்து  40 உறுப்­பி­னர்­களை நீக்­குவது ஒரு மிகச்சிறந்த முடிவு. Reviewed by Madawala News on 8/18/2016 10:21:00 AM Rating: 5