Accaddemy

413 வெற்றி இலக்கை நோக்கிய அவுஸ்திரேலிய ஆட்டம் கடும் தடுமாற்றத்தில்.. சீரிஸ் வெற்றியை நோக்கி சிங்கங்கள்.



சுற்றுலா அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வென்ற நிலையில் , இலங்கை - அவுஸ்திரேலிய இரண்டாவது டெஸ்ட்  காலியில் ஆரம்பமானது.

முதல் இனிங்க்சில் இலங்கை அணி 281 ஓட்டங்களை பெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி  முதல் இன்னிங்க்சில் 106 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 237 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஒட்டங்களை நிர்ணயித்தது.

இந்த நிலையில் தற்போது  இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி 413 மிகப்பெரிய இலக்கை நோக்கி செல்ல வேண்டி இருந்தும், 119  ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 64 ஒட்டங்களையும் அணித்தலைவர் மெத்தியுஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மிச்சல் ஸ்டார்க் 50 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இன்னும் இரண்டரை  நாட்கள் மீதமுள்ள நிலையில் நாளை இலங்கை அணி இலகுவாக வெற்றியைத் தனதாக்கி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நேரடி வீடியோ பார்க்க..
413 வெற்றி இலக்கை நோக்கிய அவுஸ்திரேலிய ஆட்டம் கடும் தடுமாற்றத்தில்.. சீரிஸ் வெற்றியை நோக்கி சிங்கங்கள்.  413  வெற்றி இலக்கை நோக்கிய அவுஸ்திரேலிய ஆட்டம் கடும் தடுமாற்றத்தில்.. சீரிஸ் வெற்றியை நோக்கி சிங்கங்கள். Reviewed by Madawala News on 8/06/2016 11:10:00 AM Rating: 5