Free Space

4 பேரை பலியெடுத்த தாய்­லாந்து தொடர் குண்டுவெடிப்பு... சிக்கிய சந்­தே­க நபர் இவர்தான்.



தாய்­லாந்தில் நிகழ்த்­தப்­பட்ட தொடர் குண்டு வெடிப்பு தொடர்­பாக அர­சியல் சாசன நிபு­ணரை இரா­ணுவம் கைது செய்­துள்ளது. தாய்­லாந்தின் 5 மாகா­ணங்­களில் அமைந்­துள்ள முக்­கிய சுற்­று­லாத்­த­லங்­களில் கடந்த வியா­ழக்­கி­ழமை, வெள்­ளிக்­கி­ழமைகளில் 11 குண்டு வெடிப்­புகள் நிகழ்த்­தப்­பட்­டன.

இதில் 4 பேர் உயி­ரி­ழந்­தனர். மேலும் 10 வெளி­நாட்­டினர் உட்பட 35 பேர் காய­ம­டைந்­தனர். இது தொடர்­பான விசா­ர­ணையை தற்­போது இரா­ணுவம் ஏற்­றுள்­ளது. நாட்டின் பாது­காப்பு தொடர்­பான வழக்­கு­களில் சந்­தே­கத்­துக்­கு­ரிய நபர்­களைக் கைது செய்து விசா­ரிக்க, தாய்­லாந்தின் இடைக்­கால அர­சியல் சாசனம் இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த நிலையில், 67 வயது அரசியல் சாசன நிபுணரை இராணுவத்தினர் சனிக்கிழமை கைது செய்தனர். திராங் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், நகோன் ஸிதம்மராட்டில் உள்ள இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரபாஸ் ரோஜனாபிதக் என்ற அந்த நபர் "அரசியல் ஆர்வலர்' என குறிப்பிடப்பட்டார். 2007ஆம் ஆண்டு தாய்லாந்தில் பிரதமர் தக்சின் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு புதிய அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. அதனை இயற்றிய குழுவில் பிரபாஸ் ரோஜனாபிதக் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன் பின்னர் பிரதமர் பதவிக்கு வந்த யிங்லக் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்தார். இந்த நிலையில், தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் பேரில் இராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.
4 பேரை பலியெடுத்த தாய்­லாந்து தொடர் குண்டுவெடிப்பு... சிக்கிய சந்­தே­க நபர் இவர்தான். 4 பேரை பலியெடுத்த தாய்­லாந்து தொடர் குண்டுவெடிப்பு... சிக்கிய சந்­தே­க நபர் இவர்தான். Reviewed by Madawala News on 8/15/2016 11:39:00 AM Rating: 5