Free Space

சகீப் சுலை­மான் படுகொலையின் பின்னணியில் 4 கோடி கொடுக்கல் வாங்கலா? வெள்ளவத்தை பிரபல வர்த்­தகர் மீது தீவிர விசாரணை.



(எம்.எப்.எம்.பஸீர்)

பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பிரதேசத்தில் கடத்­தப்­பட்டு மாவ­னல்­லையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் சகீப் சுலை­மானின் கடத்தல் மற்றும் படு­கொ­லைக்கு 40 மில்­லி­ய­ன் ரூபாவுக்கு மேற்­பட்ட கொடுக்கல் வாங்­கலே கார­ணமா என சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் வெள்­ள­வத்தை பிர­தே­சத்தின் பிரபல வர்த்­தகர் ஒரு­வ­ரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரி­வினர் தீவிர விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

இவரை விட வெள்­ள­வத்தை பகு­தியின் மேலும் இரு வர்த்­த­கர்­க­ளி­டமும் பொலிஸார் விசா­ரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்­துள்­ள­தாக குறித்த உயர் பொலிஸ் அதி­காரி தெரி­வித்தார்.

இதனை விட மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக கொள்­ளு­ப்பிட்­டியில் இருந்து தெஹி­வளை வரையில் வீதியில் பொருத்­தப்­பட்­டுள்ள அனைத்து சீ.சீ.ரி.வி. கம­ராக்­க­ளையும் சோத­னைக்கு உட்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்ள விசா­ர­ணை­யா­ளர்கள் அது தொடர்பில் பிரத்­தி­யே­க­மாக மூன்று பொலிஸ் குழுக்­களை ஈடு­ப­டுத்­தவும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

 அதன்­படி மொத்­த­மாக இவ்விசாரணைகளுக்குகென 11 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தர்.
சகீப் சுலை­மான் படுகொலையின் பின்னணியில் 4 கோடி கொடுக்கல் வாங்கலா? வெள்ளவத்தை பிரபல வர்த்­தகர் மீது தீவிர விசாரணை. சகீப் சுலை­மான் படுகொலையின் பின்னணியில் 4 கோடி கொடுக்கல் வாங்கலா?  வெள்ளவத்தை  பிரபல வர்த்­தகர் மீது தீவிர விசாரணை. Reviewed by Madawala News on 8/26/2016 09:53:00 AM Rating: 5