Accaddemy

'எகம லே' அமைதி பேர­ணியை குழப்பிய சிங்க லே 5 தேரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக விசாரணை.



(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - பெளத்­தா­லோக்க மாவத்­தையில் பொலிஸ் குற்றப் பதிவுப் பிரி­வுக்கு அருகே சமூ­கங்கள் மற்றும் மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்தி 'எக்­கம லே' எனும் ஒன்றுபட்ட அமைப்­பூ­டாக நடத்­தப்பட்ட அமைதி பேர­ணியில் புகுந்து குழப்பம் விளை­வித்­தமை தொடர்பில் ' சிங்க லே' எனும் அமைப்­புக்கு எதி­ராக விசா­ர­ணைகள்
ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

கறு­வாத்­தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் கறு­வாத்­தோட்டம் பொலிஸார் அறிக்­கை­யொன்­றினை தாக்கல் செய்­த­துடன், குறித்த சம்­பவம் தொடர்பில் தொலைக்­காட்சி செய்­தி­களில் ஒளி­ப­ரப்­பான செய்­திகள் மற்றும் அதன் காட்­சி­களை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பெற்­றுக்­கொள்­ளவும் அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் நேற்று நீதி­மன்றில் தாக்கல் செய்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த 15 ஆம் திகதி  'அபி ஒக்­கோம எகம லே' (நாம்
அனை­வரும் ஒரே இரத்தம்) எனும் சமூக, அமைப்­புக்கள் பல­வற்றின் கூட்­டி­ணைப் பில் அமைதிப் பேர­ணி­யொன்று பெளத்­தா­லோக்க மாவத்­தையில் பொலிஸ் குற்றப் பதிவுப் பிரி­வுக்கு அருகில் இடம்­பெற்­றது.

முறையான அனு­ம­தி­களைப் பெற்று மிக அமை­தியாக இப்­பே­ரணி நடத்­தப்பட்­டது. இதில் சுமார் 50 முதல் 60 பேர் வரை பங்­கேற்­றி­ருந்­த­துடன் மாலை 4.00 மணிக்கே இப்­பே­ரணி நடந்­தது.

இதன்­போது சிங்க லே என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்ட பிரி­வினர், அப்­பே­ரணியில் இருந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக கோஷங்­களை விடுத்து அங்கு குழப்பம் விளை­விக்கும் வண்ணம் நடந்­து­ கொண்டனர்.

இதனால் இரு தரப்­பி­ன­ருக் கும் இடையே கடு­மை­யான வாக்கு வாதம் ஏற்­பட்­டது.

இவ்­வாறு குழப்பம் விளை­வித்­த­வர்கள் தரப்பில் 5 தேரர்­களும் அவர்­க­ளுடன் வந்த 15 பேரு­மாக மொத்தம் 20 பேர் இருந்­தனர்.

இந் நிலையில் இரு தரப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான வாய்த்­தர்க்­கத்தை பொலி ஸார் தலை­யிட்டு பாரிய அசம்­பா­விதம் ஒன்று ஏற்­ப­டு­வதை தடுத்­தனர்.

பொலிஸார் தலை­யீடு செய்­யாமல் இருந்­தி­ருப்பின் இன, மத நல்­லி­ணக்­கத்­துக்கு பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக நிலைமை மாறி­யி­ருக்கும்.

எனவே இது குறித்து செய்யும் விசா­ர­ணை­க­ளுக்கு அமைதிப் பேரணி மற்றும் குழப்பக் காட்­சிகள் அடங்­கிய வீடி­யோக்­களை ஊடக நிறு­வ­னங்கள் விசா­ர­ணை­க­ளுக்கு கைய­ளிக்க உத்­தர­விட வேண்டும். என பொலிஸார் கோரினர்.


இதற்கு அனு­ம­தி­ய­ளித்த நீதிவான் நிஸாந்த பீரிஸ் 6 இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளுக்கு இது தொடர்­பி­லான மாற்றங்கள் செய்யப்படாத உண்மைக் காட்சிகள் அடங்கிய பதிவுகளை கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்க அந்தந்த ஊடக நிறுவன செய்தி ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது குறித்த அடுத்த கட்ட விசாரணைகள் செப்டெம்பர் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

'எகம லே' அமைதி பேர­ணியை குழப்பிய சிங்க லே 5 தேரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக விசாரணை. 'எகம லே' அமைதி பேர­ணியை குழப்பிய சிங்க லே 5 தேரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக விசாரணை. Reviewed by Madawala News on 8/24/2016 09:52:00 AM Rating: 5