Free Space

5 சதத்திற்காக 41 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு...


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்  
இந்தியாவில் டெல்லியில் வெறும் 5 பைசாவுக்காக ( சத பணத்திட்காக) கடந்த 41 ஆண்டுகளாக வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கிற்காக சம்பந்தப்பட்ட கண்டக்டரும்இ டெல்லி போக்குவரத்துக் கழகமும்இ இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்
டெல்லியில் கடந்த 1973-ம் ஆண்டில் நடத்துநராக பணியாற்றியவர் ரன்வீர் சிங் யாதவ். இவர் சம்பவ தினத்தன்று ஒரு பெண் பயணியிடம் 10 காசுகள் டிக்கெட்டுக்குஇ 15 காசுகள் வாங்கியுள்ளார். மீதமுள்ள 5 பைசாவை கணக்கில் காட்டாமல் அவர் வைத்துக் கொண்டார்.

ஆனால் அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக் கொண்டார் ரண்வீர். இதனால் ரன்வீருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் போக்குவரத்துக் கழகத்துக்கு ரண்வீர் 5 பைசா நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி 1976-ம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 

ஆனால் இதை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ரன்வீர். இந்த வழக்கில் ரன்வீருக்கு 1990-ம் ஆண்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. 

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில் இவ்வழக்கில் ரண்பீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு நஷ்ட ஈடாக ரூ. 6 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது. 

எனினும்  இதை எதிர்த்து டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக கடந்த 41 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிந்தபாடில்லை. 

இந்த வழக்கிற்காக டெல்லி போக்குவரத்துக் கழகமும ரன்வீரும் இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்.

தற்போது 5 பைசா நாணயமே புழக்கத்தில் இல்லாத சூழலில் 41 ஆண்டுகளுக்கு முந்தைய சில்லறை பிரச்சினையால் இன்னமும் நீதிமன்றப் ப்படியேறி வருகிறார் தற்போது 73 வயதாகும் ரன்வீர். 
5 சதத்திற்காக 41 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு... 5 சதத்திற்காக 41 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு... Reviewed by Madawala News on 8/16/2016 09:06:00 PM Rating: 5