Ad Space Available here

5 கடும் ­போக்­கா­ளர்­கள் இணைந்து 'பொதுச் சொத்­துக்­களை பாது­காக்கும் மக்கள் ஒன்­றியம்' என அமைப்பொன்றை  தோற்­று­வித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முயற்சி.


கடந்த மகிந்த ஆட்­சிக்­கா­லத்தில் இலங்கை வாழ் சிறு­பான்மை சமூ­கத்­தினர் பல கோணங்­களில் ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கும், அடக்கு முறை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டனர். அந்த அடக்கு முறைகள் பாரிய விளை­வு­களை உண்­டு­பண்ணி.
.
குறிப்­பாக பல நூற்­றாண்டு தொன்­மை­யான வர­லாற்றை கொண்ட முஸ்­லிம்கள் சுதந்­தி­ரத்­துக்கு பின்னர் மஹிந்த ஆட்­சி­யி­லேயே பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தனர் என வர­லாற்றில் பதி­யப்­படும் அள­வுக்கு பல்­வே­று­பட்ட இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்­தனர்.
.
சிறு­பான்மை சமூ­கத்தின் எதிர்ப்பை சம்­பா­தித்த மஹிந்த தனது ஆட்­சி­பீ­டத்தை துறக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்டார். சிறு­பான்மை சமூ­கத்தின் பாது­காப்­புக்கும், சுதந்­தி­ரத்­துக்கும் உத்­த­ர­வாதம் கொடுத்த ஜனா­தி­பதி மைத்­திரி, பிரதர் ரணில் ஆகி­யோரின் கூட்டு அர­சுக்கு முஸ்லிம் மக்கள் பூரண ஆத­ரவு வழங்கி தமிழ், ஆட்­சி­பீடம் ஏற்­றினர்.
.
காலங்கள் உருண்­டோட மீண்டும் இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்தும் வகையில் நாட்டில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்­றன.
.
மீண்டும் முஸ்லிம் மக்கள் மத்­தியில் சில பகு­தி­களில் அச்சம் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. அந்த வகையில் குரு­நாகல் மும்­மன்ன கிரா­மத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத செயற்­பா­டுகள் கடந்த சில மாதங்­க­ளாக கட்­ட­விழ்த்து விடப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடும்­போக்கு சிங்­கள அமைப்­புக்கள் சில­வற்றின் வழி­காட்­ட­லி­லேயே இச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை தற்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன.
.
குரு­நாகல் மாவட்­டத்தில் நீர்­கொ­ழும்பு குரு­நாகல் வீதியில் தம்­ப­தெ­னிய மும்­மன்ன என்ற முஸ்லிம் கிராமம் அமையப் பெற்­றுள்­ளது. மும்­மன்ன என்ற முஸ்லிம் கிரா­மத்தின் வர­லாறு சுமார் 1000 வரு­டங்­களை தாண்­டி­யுள்­ளது.
.
தம்­ப­தெ­னிய இரா­ச­தா­னி­யாக இருந்த காலப்­ப­கு­தியில் தம்­ப­தெ­னிய இரா­ச­தா­னியை ஆட்சி செய்த இரண்டாம் பராக்­கி­ர­ம­பாகு (கி.பி.1232 – 1270) மன்னனின் 22 ஆவது வருட ஆட்­சிக்­கா­லத்தில் வாய் பேச­மு­டி­யாத தொற்­றுநோய் ஒன்­றுக்கு உள்­ளா­கினான்.
.
இந்த நோயை குணப்­ப­டுத்தும் நோக்கில் டில்லி சுல்­தா­னிடம் உதவி கோரப்­பட்­டுள்­ளது.
.
ஸ்பைன் வர­லாற்று பின்­ன­ணியைக் கொண்ட வட இந்­தி­யாவை சேர்ந்த அன்சார் இப்னு துபைல் உட்­ப­ட­லான வைத்­திய குழு இரண்டாம் பராக்­கி­ரம பாகுவின் சிகிச்­சைக்­காக இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அன்சார் இப்னு துபைலின் முயற்­சியில் மன்னன் குண­ம­டை­கின்றான்.
.
அதன்­பின்னர் இவர் அரச மருத்­து­வ­ராக நிய­மிக்­கப்­பட்டு (பெஹத்தே முகாந்­திரம்) என்று அழைக்­கப்­பட்­டுள்ளார். இவரை கெள­ர­வப்­ப­டுத்தும் வகையில் மன்னன் சில கிரா­மங்­களை பரி­ச­ளித்­துள்ளான். இந்த வழித்­தோன்­றலில் தம்­ப­தெ­னிய பகு­தியில் முஸ்லிம் கிரா­மங்கள் சில உரு­வா­கின. அவற்றுள் பனா­விட்டி, மும்­மன்ன போன்ற கிரா­மங்கள் குறிப்­பி­டத்­தக்­க­வை­யாகும்.
.
இவ்­வா­றான வர­லாற்றைக் கொண்ட மும்­மன்ன கிரா­மத்தில் முஸ்லிம் சிங்­கள மக்கள் மிகவும் ஐக்­கி­யத்­துடன் வாழ்ந்து வந்­துள்­ளனர். இந்த இன ஐக்­கி­யத்தின் அடை­யா­ள­மாக மும்­மன்ன மற்றும் அதற்கு அருகில் அமைந்­துள்ள கல்­முல்லை ஆகிய சிங்­கள கிராம மக்கள் இணைந்து வயத்­தேவ என்ற பிர­தே­சத்தில் முஸ்லிம், சிங்­கள மாண­வர்கள் இணைந்து கற்கும் நோக்கில் பாட­சா­லை­யொன்றை அமைத்­துள்­ளனர். ஆனால் காலப்­போக்கில் பெளத்த மத­குரு ஒரு­வரின் இன­வாத செயற்­பாட்டால் முஸ்லிம் மாண­வர்கள் அந்த பாட­சா­லைக்கு வருகை தரக்­கூ­டாது என்று விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­தாக வர­லாறு கூறு­கின்­றது.
.
இந்­நி­லையில் கல்­வித்­து­றையில் அநா­த­ர­வாக்­கப்­பட்ட மும்­மன்ன பிர­தேச முஸ்லிம் மாண­வர்­களின் நலன்­க­ருதி 1975 ஆம் ஆண்டு மும்­மன்ன முஸ்லிம் மக்­களின் முயற்­சியில் மும்­மன்ன பள்­ளி­வா­சலுக்கு சொந்­த­மான மைய­வாடி காணியில் சுமார் 65 பேர்ச்சஸ் நிலப்­ப­ரப்பில் தரம் 1 முதல் 11 வரை­யி­லான கனிஷ்ட பாட­சாலை ஒன்று அமைக்­கப்­பட்­டது. இவ்­வாறு அமைக்­கப்­பட்ட இந்த பாட­சா­லையில் இருந்து பல புத்­தி­ஜீ­வி­களை அந்த கிராமம் பெற்றுக் கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­வி­ட­ய­மாகும்.
.
இந்­நி­லையில் அப்­பா­ட­சா­லைக்­காக அக்­கா­லத்­தி­லி­ருந்த அர­சியல் பிர­மு­கர்கள், ஊர் பெரி­யார்­களின் முயற்­சியில் பாட­சா­லைக்கு எதிரே இருந்த மார்ட்டின் முத­லா­ளிக்கு சொந்­த­மான காணி­யொன்று அவ­ரது விருப்­பத்தின் பெயரில் மைதானம் அமைக்கும் நோக்கில் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டது.
அக்­கா­லப்­ப­கு­தியில் பாட­சா­லையின் பெய­ருக்கு குறித்த காணியை மாற்றிக் கொள்ள அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­ட­போ­திலும் மார்ட்டின் முத­லாளி இறக்­கவே அவ­ரது மகன் நவ­ரத்­தி­ன­வுக்கு அந்த காணி உரித்­தா­கி­யுள்­ளது.
.
1977 – 1988 ஆண்­டு­க­ளுக்கு இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் உரி­மையை பாட­சா­லைக்கு மாற்­றிக்­கொள்ளும் நோக்கில் மார்ட்டின் பல தடவை அழைக்­கப்­பட்ட போதிலும் அவ்­வி­டயம் அவரால் அலட்­சி­ய­மாக விடப்­பட்­ட­தாக ஊர் பிர­முகர் ஒருவர் எமக்கு சுட்­டிக்­காட்­டினார். 1975 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானம் மும்­மன்ன கனிஷ்ட பாட­சாலை மாண­வர்­க­ளா­லேயே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. பாட­சா­லையின் கட்­டுப்­பாட்­டி­லேயே இந்த மைதா­னமும் உள்­ளது.
.
இந்த மைதா­னத்­துக்கு சுற்று வேலி ஒன்­றில்­லா­ததால் மாடுகள் மேய்­கின்ற அதே­நேரம் சிலர் மைதா­னத்தில் இரவு நேரத்தில் மது அருந்தும் இட­மா­கவும் மாறி­யுள்­ளது.
.
இதனைத் தடுக்கும் நோக்கில் பாட­சாலை நிர்­வாகம் சில தன­வந்­தர்­களின் உத­வி­யு­டனும் பிர­தேச பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பணத்தின் ஊடா­கவும் சுமார் 6 இலட்சம் ரூபாவை பெற்­றுக்­கொண்டு வேலி­ய­மைக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.
.
வேலி அமைக்கும் வேலைகள் ஆரம்­ப­மா­கவே கடந்த ரமழான் 15 ஆம் தினத்­தன்று சுமார் 100 பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ஆர்ப்­பாட்­ட­மாக வந்து வேலி­கட்­டு­வதை தடுத்து நிறுத்­தி­யுள்­ளனர். இதனால் மும்­மன்ன முஸ்­லிம்­க­ளுக்கு, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் வாய்த்­தர்க்­கமும், கைக­லப்பும் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் பொலிஸார் தலை­யிட்டு இதனை கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
.
இந்த மைதானம் பொது மைதானம். இதனை வேலி­கட்டி முஸ்­லிம்­க­ளுக்கு உரி­மை­கோர முடி­யாது என்றே ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கோஷ­மெ­ழுப்­பி­யுள்­ளனர்.
.
சுற்­றிலும் உள்ள பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த சிலர் குறிப்­பாக 5 கடும்­போக்­கா­ளர்­களின் தலை­மையில் 'பொதுச் சொத்­துக்­களை பாது­காக்கும் மக்கள் ஒன்­றியம்' என்று ஒரு அமைப்பை தோற்­று­வித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத கருத்­துக்­களை பிர­தேசம் பூரா­கவும் கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளனர்.
.
முஸ்­லிம்­களின் வியா­பார ஸ்தலங்­களை புறக்­க­ணிக்­கு­மாறு வீடு வீடாகச் சென்று இவ்­வ­மைப்பு பிர­சாரம் செய்­தது மாத்­தி­ர­மல்­லாமல் சிங்­கள ராவய அமைப்பின் இலச்­சினை பொறிக்­கப்­பட்ட துண்­டுப்­பி­ர­சு­ரங்­களும் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.
.
மும்­மன்ன பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான சுமார் 20 கடைகள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வி­யா­பா­ரிகள் 90% பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரு­ட­னேயே வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.
.
இந்த பிர­சா­ரத்தின் பின்னர் முஸ்லிம் வியா­பார ஸ்தலங்­களில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.
.
இதனால் கிரா­மத்தில் வசிக்கும் சுமார் 250 முஸ்லிம் குடும்­பத்­தி­னரின் உள்­ளங்­களில் பயமும், பீதியும் மேலெ­ழுந்­தி­ருந்­தன. எரி­கிற நெருப்பில் எண்ணெய் ஊற்­று­வது போல் மஹிந்த ஆட்­சியில் முஸ்லிம் விரோத செயற்­பாட்­டாளர் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் பொது செய­லாளர் ஞான­சார தேரர் இம்­மாதம் 10 ஆம் திகதி (கடந்த புதன்­கி­ழமை) மும்­மன்ன பள்­ளி­வா­ச­லுக்கு 250 மீட்டர் தொலைவில் அமைந்­துள்ள விகா­ரையில் தர்ம உப­தேசம் செய்ய வர­வுள்­ள­தாக ஊர்­பூ­ரா­கவும் சுவர் ஒட்­டி­களும், துண்­டு­பி­ர­சு­ரங்­களும் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.
.
அதனைத் தொடர்ந்து பிர­தே­ச­வா­சி­களின் பீதி மேலும் அதி­க­ரித்­தது. பிர­தே­ச­வா­சிகள் இந்­நி­லையை கருத்திற் கொண்டு ஏலவே உரிய அதி­கா­ரி­க­ளி­டமும் அர­சியல் பிர­மு­கர்­க­ளி­டமும், முஸ்லிம் அமைப்­பு­க­ளி­டமும் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர்.
.
இந்­நி­லையில் நேற்று முன்­தினம் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார உட்­பட சிலர் ஐந்து வாக­னங்­களில் மும்­மன்ன பிர­தே­சத்­துக்கு பிற்­பகல் 6.00 மணி­ய­ளவில் வந்­துள்­ளனர். மும்­மன்ன விகா­ரைக்கு சென்ற இக்­கு­ழு­வினர் இரவு 9.30 மணி வரையில் விகா­ரையில் இருந்­த­தா­கவும் ஞான­சா­ர­தேரர் சுமார் 3 மணி நேரம் உரை­யாற்­றி­யுள்­ள­துடன் பெரி­ய­ளவில் அந்த நிகழ்­வுக்கு மக்கள் கலந்­து­கொள்­ள­வில்லை என்றும் பிர­தே­ச­வா­சி­யொ­ருவர் எமக்கு தெரி­வித்தார்.
.
ஞான­சார தேரர் கார­சா­ர­மான உரை­களை நிகழ்த்­த­வில்லை என்றும் தர்ம போத­னை­க­ளையே மேற்­கொண்டார் எனவும் பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.
.
ஞான­சார தேரரின் வரு­கையை அடுத்து சுமார் 200 பொலி­ஸாரும் அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் பிர­தே­சத்தில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதன்­போது எந்­த­வொரு அசம்­பா­வி­தங்­களும் பிர­தே­சத்தில் இடம்­பெ­ற­வில்லை.
.
என்­னதான் இன­வாத பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டாலும் பெரும்­பான்மை மக்­களும் இன­வா­தத்தில் சிக்­கி­கொள்­ள­மாட்­டார்கள் என்­பது இதன்­மூலம்  தற்­போது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.
.
எது எவ்­வா­றி­ருப்­பினும் மும்­மன்ன முஸ்­லிம்­களின் உரி­மை­யான குறித்த மைதா­னத்தை அவர்கள் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் வர­லாறு நெடு­கிலும் அப்­பி­ர­தேச முஸ்லிம்– சிங்­கள மக்­களின் ஒற்­றுமை தொடர்ந்தும் பேணப்­பட்டு சக­வாழ்­வுடன் வாழ்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை உரிய தரப்­பினர் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது தற்­போ­தைய தேவை­யா­க­வுள்­ளது.
.
இந்த விவ­காரம் தொடர்பில் மும்­ மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில் அதிபர் எம்.சுஹைப் விடி­வெள்­ளிக்கு ்கு கருத்து வெளியி­­டு­கை­யில், குறித்த மைதா­னக் காணி பாட­சா­லைக்குச் சொந்­த­மா­னது என்­ப­தற்­கான சகல ஆதா­ரங்­களும் ஆவ­ணங்­களும் எம்­மிடம் உண்டு.
.
இதனை அர­சு­டை­மை­யாக்கி பாட­சா­­லை­க்கு கைய­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளை அமைச்சர் காமினி ஜய­விக்­ரம பெரேரா 1978 இல் மேற்­­கொண்டார்.
.
1979 இல் நில அளவையும் செய்­யப்­பட்­டது. இதற்­காக மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய 9 கட்ட வேலை­களில் 7 வேலைகள் முடிந்­து­விட்­டன.
இந் நிலை­யில்தான் தற்­போது சில சக்­திகள் பாட­சா­லைக்குச் சொந்­த­மான காணியை பொதுக்­ காணி­யாக மாற்­று­மாறு கோரி வரு­கின்­றன. இந்த விவ­கா­ரத்தை அர­சாங்க அதி­காரிகள் மூல­மாக சுமு­க­மாக தீர்ப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­­கொண்டு வரு­கிறோம் என்­றார்.
எனவேதான் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதுவிடயத்தில் தலையிட்டு இப் பாடசாலையின் காணிப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
.
அதேபோன்று காலாகாலமாக நல்லுறவுடன் வாழ்ந்து வரும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனையும் சக்திகளை தோற்கடிக்கவும் வேண்டும்.
5 கடும் ­போக்­கா­ளர்­கள் இணைந்து 'பொதுச் சொத்­துக்­களை பாது­காக்கும் மக்கள் ஒன்­றியம்' என அமைப்பொன்றை  தோற்­று­வித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முயற்சி. 5 கடும் ­போக்­கா­ளர்­கள் இணைந்து 'பொதுச் சொத்­துக்­களை பாது­காக்கும் மக்கள் ஒன்­றியம்' என அமைப்பொன்றை  தோற்­று­வித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முயற்சி. Reviewed by Madawala News on 8/14/2016 06:34:00 PM Rating: 5