Free Space

சகீம் சுலைமான் படுகொலை... புதிய விசாரணை அப்டேட்கள்.



பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹமத் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இன்று வரையில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, கோட்டே, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளின் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளும் சோதனையிடப்பட்டுள்ளன.

அத்துடன்கொ, லையுடன் தொடர்புடையதாக சந்தேககிக்கப்படும் ஐந்து வியாபாரிகளின் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தவகையில், கொலை இடம்பெற்ற காலப் பகுதியில் குறித்த ஐவரினதும் வாகனங்கள் பயணித்த தூரங்கள் தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த வகனங்களில் பணியாற்றும் சாரதிகள் 10 பேரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொலை இடம்பெற்ற காலப் பகுதியில் குறித்த வர்த்தகர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் தேடல்கள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
சகீம் சுலைமான் படுகொலை... புதிய விசாரணை அப்டேட்கள். சகீம் சுலைமான் படுகொலை...  புதிய விசாரணை அப்டேட்கள். Reviewed by Madawala News on 8/29/2016 06:41:00 AM Rating: 5