Oceas

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவப்புச் சமிக்ஞை. 51 M Pக்களுக்கும் எச்சரிக்கை.



கட்சியின் சட்டம், ஒழுங்கை மீறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கும்  51 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அமைப்பாளர் பதவியும், உறுப்பினர் அந்தஸ்தும் நீக்கப்படலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவப்புச் சமிக்ஞை விடுத்துள்ளார்.

கட்சியை இரண்டாக்கி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட கட்சியொன்று அரசியல் வரலாற்றில் பதிவாகவில்லை. லலித் அதுலத் முதலியும் காமினி திஸாநாயக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்ததனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும், அதனை வெற்றிப் பாதையில் எடுத்துச் செல்வதே தனது இலக்கு எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 41 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். D C

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வழியில் செல்லாத சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களே அமைப்பாளர் பதவிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே சகலதையும் விட்டுக் கொடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கையிலேயே பயணித்துக் கொண்டுள்ளது. கட்சியில் செல்வாக்குள்ளவர்களை நீக்குவது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றே நான் கருதுகின்றேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவப்புச் சமிக்ஞை. 51 M Pக்களுக்கும் எச்சரிக்கை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவப்புச் சமிக்ஞை. 51 M Pக்களுக்கும் எச்சரிக்கை. Reviewed by Madawala News on 8/18/2016 08:38:00 AM Rating: 5